சமீபத்தில் கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத் திருமணம்தான். ஐசரி கணேஷின் மகள் ப்ரீதா – லஷ்வின் குமார் திருமண விழா அம்பானி வீட்டு திருமணம் போல மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டதாக பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்ற மிக முக்கியமான ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் சினிமா தயாரிப்பாளர்கள் தொழில் அதிபர்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதாக தெரிய வருகிறது. பல்வேறு வகைகளில் திருமண விருந்து பரிமாறப்பட்டுள்ளது. ஒரு திருவிழா போல இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் சில முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்காதது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக நடிகர் விஜய் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர் இரவு 7 மணியளவில் திருமண விழாவுக்கு வர தயாராக இருந்திருக்கிறார். ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த நிலையில் அவர் கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டதாக தெரிய வருகிறது.
ஆனால் சில தினங்களில் புதுமணத் தம்பதி ப்ரீதா – லஷ்வின் குமாரை தனது வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு விருந்து தரும் முடிவில் நடிகர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் குபேரா படப்பிடிப்பில் இருந்ததால், தவிர்க்க முடியாத நிலையில் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவுக்கு வரவில்லை என்கின்றனர்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாராவும் திருமண விழாவுக்கு வரவில்லை. அதற்கு காரணம், திருமண அழைப்பிதழை ஐசரி கணேஷ் அவரது வீட்டுக்கு நேரில் வந்து தந்து அழைக்காததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் அவர் திருமண விழாவிற்கு வராமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கும் ஏற்கனவே படம் தயாரிப்பு விவகாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வருகிறது. அதனால் கோர்ட் வரை சென்று வழக்கு இருப்பதால் சிம்பு இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை என்ற காரணமும் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரவி மோகன், அவரது காதலி கெனிஷா இருவரும் செம வைரலாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





