தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ “ராஜா ராணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். அதன் பின்னர் இளைய தளபதி விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என அடுத்தடுத்த பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த அவர் பெரிய இயக்குனராக உருவெடுத்தார். அதோடு தற்போது தனது கரியரின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள அவர் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் பக்கம் திரும்பி பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நிகழ்ந்து வரும் ஷாருக்கானை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

இந்த ஜவான் படத்தின் மூலம் அட்லீ பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். அதோடு இந்த ஜவான் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக ஷாருக்கான் உடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சானியா மல்கோத்ரா, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் என பலரும் நடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்தது. அதோடு ஹாலிவுட்டுக்கு நிகராக இந்த படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் வெளியாகியுள்ள இந்த படமானது நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை எட்டும் என்று அனைவரும் இப்போதே பேச தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இந்த ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஜவான் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நயன்தாரா ஆகியோர் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக திகழ்ந்துவரும் ஏ.ஆர் ரகுமான் ஒரு படத்திற்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது அவரை மிஞ்சியுள்ள அனிருத் ஜவான் படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போன்று பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் நயன்தாராவும் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் மற்றும் நயன்தாராவுக்கு இது பாலிவுட்டில் முதல் படமாக இருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய சம்பளத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா ராணி படத்தில் முதல் முறையாக நயன்தாராவை வைத்து இயக்கிய அட்லீ அதே சென்டிமென்ட்டை மனதில் வைத்து பாலிவுட்டில் அறிமுகமாகும் இந்த ஜவான் படத்திலும் அவரை இணைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.





