- Advertisement -
Homeபொழுதுபோக்குஒலிம்பிக் போட்டியாளர்களிடம் ஈட்டி எறிதல் பயிற்சி பெறும் பிக்பாஸ் பிரபலம் - ரைட்டர் பட இயக்குனர்...

ஒலிம்பிக் போட்டியாளர்களிடம் ஈட்டி எறிதல் பயிற்சி பெறும் பிக்பாஸ் பிரபலம் – ரைட்டர் பட இயக்குனர் படத்தில் அப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா?

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடித்த படம் ரைட்டர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் ரசிகர்களின் மத்தியில் கவனத்தையும் பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் பிராங்க்ளின். இயக்குனர் பா ரஞ்சித்திடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர்.

ரைட்டர் படத்தை தொடர்ந்து இப்போது புதிய படம் ஒன்றை இயக்க அவர் ஆயத்தமாகி உள்ளார். இந்த புதிய படத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்ற விஜய் வர்மா என்பவரை ஹீரோவாக வைத்து இந்த படத்தை பிராங்க்ளின் இயக்க உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் விஜய் வர்மா ஈட்டி எறியும் வீரர் கேரக்டரில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்த முழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறியும் வீரர்களாக இருந்தவர்களை அழைத்து வைத்து தீவிரமாக பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு கேரக்டரில் நடிப்பவர்கள் அதில் சிறப்பான ஆற்றலை திரையில் வெளிப்படுத்த இதுபோல் பயிற்சி பெறுவது வழக்கம்தான். உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் தேவர்மகன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் கம்பு சுற்றுவது போல் இருந்ததால், அதற்காக பல நாட்கள் கம்பாட்டம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல் பைசன் காளமாடன் படத்தில் கபடி விளையாட்டு வீரராக நடித்த நடிகர் துருவ் விக்ரம் உண்மையான கபடி வீரரரை போலவே பல மாதங்கள் கபடி பயிற்சி பெற்று அந்த படத்தில் நடித்தார் என்ற தகவலும் வெளியானது. இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கும் போது அதுசார்ந்த பயிற்சிகளை பெற்று நடிப்பது திரையில் நடிப்பை இயல்பாக யதார்த்தமாக காட்டும்.

அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான விஜய் வர்மா, ஈட்டி எறிதல் பயிற்சி பெற்று ஒரு ஈட்டி எறியும் வீரராக இந்த படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்