- Advertisement -
Homeபொழுதுபோக்குபத்தா படம் ஓடும் தியேட்டர்களுக்கு திடீர் விசிட் செய்து வரும் தயாரிப்பாளர் அட்லி - விஜய்...

பத்தா படம் ஓடும் தியேட்டர்களுக்கு திடீர் விசிட் செய்து வரும் தயாரிப்பாளர் அட்லி – விஜய் சேதுபதி வராததற்கு இதுதான் காரணமா? வெளிப்பட்ட உண்மை!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் அட்லி. பிறகு ராஜா ராணி படம் மூலம் அவர் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தொடர்ந்து விஜய் நடித்த மெர்சல் தெறி பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கினார். அந்த 3 படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து இந்தியில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை அட்லி இயக்கினார். அந்த படமும் 1150 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இதைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா என்ற படத்தை அட்லி டைரக்ட் செய்துள்ளார். இது பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இயக்குனர் அட்லி நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா என்ற படத்தை அவரே சொந்தமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்ட் செய்து இருக்கிறார். கடந்த 2ம் தேதி வெளியான பத்தா படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

மூன்று நாட்களில் இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி இருக்கிறது. தொடர்ந்து ரசிகர்களின் அமோக வரவேற்பு பத்தா படத்துக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் அட்லி பத்தா படம் ஓடும் தியேட்டர்களுக்கு நேரில் விசிட் செய்து ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். குறிப்பாக திருநெல்வேலி மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தியேட்டர் விசிட் செய்து தயாரிப்பாளர் அட்லி ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

ஆனால் இந்த தியேட்டர் விசிட் ரசிகர்கள் சந்திப்பின்போது படத்தின் நாயகன் விஜய் சேதுபதி உடன் வராதது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால் அவர் இந்த தியேட்டர் விசிட்டில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டுமே விஜய் சேதுபதி நேரம் ஒதுக்குகிறார்.

மற்றபடி அவர் அட்லியுடன் தியேட்டர் விசிட் வராததற்கு முக்கிய காரணம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி லீடர்ன்னா என்ன லீடர்ஷிப்னா என்ன என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் தவெகவினர் இதனால் கடுப்பாகினர். இந்த சூழ்நிலையில் விஜயின் ஆதரவாளர் அட்லியுடன் விஜய் சேதுபதி ஒன்றாக பங்கேற்கும் பட்சத்தில் தேவையற்ற சர்ச்சை விமர்சனம் வரலாம். இது இருவருக்குமே பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை அட்லியும் விஜய் சேதுபதியும் திட்டமிட்டு தவிர்த்து இருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்