- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? கதைக்கு தான் சினிமாவில் பஞ்சம்…...

நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா? கதைக்கு தான் சினிமாவில் பஞ்சம்… டைட்டிலுக்குமா? – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதையம்சத்தில் திரைக்கதையில் வெற்றியை பெற்ற படங்கள் என்றால் அதில் 10 கூட இல்லை. அதே போல் வணிக ரீதியாக 100 கோடி ரூபாய் வசூலித்த சில படங்களும் உண்மையில் காட்டுமொக்கை என்ற விமர்சனத்தை பெற்ற படங்களாகவும் இருந்தன.

இந்த ஆண்டின் துவக்கத்திலும் இப்போது தமிழில் 3 படங்கள் வெளியான நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான பராசக்தி படத்துக்கும் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. அதே போல் வா வாத்தியார் படமும் ரசிகர்களை எரிச்சலாக்கி உள்ளது. ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் இந்த படமும் மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை பொருத்த வரை நல்ல கதைக்கு பஞ்சம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. சொந்த சரக்கில் படம் எடுக்க எந்த இயக்குனரும் தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களிடம் அதற்கான சரக்கு இல்லை. வெறும் கையில் முழம் போட வந்திருக்கின்றனர். கதைக்குதான் பஞ்சம் என்றால் நல்ல டைட்டில் வைக்கவும் யோசிக்க நேரமில்லை.

அதனால் ஈ எறும்பு கழுகு புலி சிங்கம் ஏண்டா தலைக்கு எண்ணெய் வைக்கலே என் ஆளோட செருப்ப காணோம் என்றெல்லாம் டைட்டில் வைக்கின்றனர். இல்லை என்றால் பழைய பட டைட்டில்களை சத்தமின்றி சுட்டு விடுகின்றனர். இப்போது நடிகர் விஜய் சேதுபதி படத்தின் டைட்டிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பான் இந்தியா படமாக உருவாக்கி வரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சார்மி கவுர் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் தபு சம்யுக்தா மேனன் மற்றும் துனியா விஜய் நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கேரக்டர்களின் நடிக்கின்றனர். இந்தப்படம் தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்திற்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த புதிய படத்திற்கு ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆங்கில டைட்டிலின் தமிழாக்கம் என்னவென்றால் சேரி நாய் 33 கோவில் ரோடு என்பதாகும். இப்படி ஒரு டைட்டிலா? என்ன கொடுமய்யா இது என்று சினிமா ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

சற்று முன்