- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது ரசிகர் மன்ற நிர்வாகி மகனுக்கு பெயர் வைத்த நடிகர் விஜய் சேதுபதி… நல்லவேளை அந்த...

தனது ரசிகர் மன்ற நிர்வாகி மகனுக்கு பெயர் வைத்த நடிகர் விஜய் சேதுபதி… நல்லவேளை அந்த பேரை வைக்காம விட்டாரே? – ஆனா இந்த பேர் கூட சூப்பரா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகராக நடித்து பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கி, இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் 300 ரூபாய் தினசரி சம்பளத்தில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற சில படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வார் விஜய் சேதுபதி.

அப்போது படம் பார்த்த ரசிகர்களுக்கு அவர் அறிமுகமே இல்லாதவர். இப்போது அந்த படங்களை பார்க்கும் போதுதான் அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதே தெரியும். அதேபோல் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லன் கேரக்டரில் சில காட்சிகளில் வருவார் விஜய் சேதுபதி. ஆனால் அந்த படத்தில் கதாநாயகன் சசிகுமார்தான். காமெடியனாக சூரி நடித்திருப்பார். இப்போது சூரியும், விஜய் சேதுபதியும் சசிகுமாரை விட பெரிய நடிகர்களாக தமிழ் சினிமாவில் மாறிவிட்டனர்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக பெரிய வெற்றி படங்களை தராத நடிகர் விஜய் சேதுபதி, இப்போது அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்த தமிழ் படங்கள் பட்டியலில் மகாராஜா படமும் இடம்பெற்றது. இந்த ஆண்டில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்த சாதனை படங்கள் ஐந்துதான். அதில் ஒன்றுதான் மகாராஜா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஜா படத்துக்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கம் ஒரு புதிய படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகி இருக்கிறார். இந்த சூழலில் நடிகர் விஜய் சேதுபதி, விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி வாரம்தோறும் நடிகர் விஜய் சேதுபதி வழங்க இருக்கிறார் இதற்கான பிரமோ வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

- Advertisement -

சினிமா படப்பிடிப்பு, பிக்பாஸ் என பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். அது தவிர டிரெயின் படமும் மிஷ்கின் இயக்கத்தில் அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் கவனம் ஈர்க்கும் படங்களாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு சமீபத்தில் பெயர் சூட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, அந்த குழந்தைக்கு கணியன் என்று பெயர் வைத்து, அந்த குழந்தையை முத்தமிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவும் புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகின்றன. பிக்பாஸ் என பெயர் வைத்திருந்தால் டைமிங் ஆக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சற்று முன்