- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடிக்க நாங்கள் யாருக்கும் அனுமதி தரவில்லை, பிரேமலதா வெளியிட்ட அறிக்கையால் திடீர்...

ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் நடிக்க நாங்கள் யாருக்கும் அனுமதி தரவில்லை, பிரேமலதா வெளியிட்ட அறிக்கையால் திடீர் பரபரப்பு – அப்போ விஜய் படத்தில்…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தன்னிகரில்லாத ஒரு இடத்தில் இருந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்படும் அவர், பல வெற்றிப் படங்களை கொடுத்து, முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த காலகட்டத்தில், திரையுலகம் சந்தித்த பல பிரச்னைகளை சரிசெய்தார். குறிப்பாக பல ஆண்டுகளாக நீடித்த நடிகர் சங்க கடனை அடைத்தார்,

நடிகர் விஜயகாந்தை பொருத்தவரை, மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக பசியோடு இருக்க யாரையும் விடமாட்டார். யாரை சந்தித்தாலும் அவர் கேட்கிற முதல் கேள்வி சாப்பிட்டீங்களா? என்பதாக தான் இருக்கும். அவரது வீட்டில் எப்போதும் வருபவர்களுக்கு உணவு உபசரிப்பு நடந்துக்கொண்டே இருக்கும்.

- Advertisement -

அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளில், நடிகர் முதல் சாதாரண ஊழியர் வரை அனைவருக்கும் சமமான உணவு என்ற முறையை கொண்டு வந்தவர். தவிர, படப்பிடிப்பில் அனைவருக்கும் தரமான, சத்தான அசைவ உணவு பரிமாறச் செய்தவர். தயாரிப்பாளர் செலவாக கருதினால், அந்த உணவு செலவுகளை தனது சம்பளத்தில் கழிக்கச் சொன்னவர்தான் கேப்டன் விஜயகாந்த்.

தேமுதிக என்ற அரசியல் கட்சியை துவங்கி, தமிழக அரசியலில் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியவர். அவரது கட்சி சந்தித்த இரண்டாவது சட்டசபை தேர்தலிலேயே திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி, அதிமுக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால் காலத்தின் கோலமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.

- Advertisement -

அவரது மறைவுக்கு பிறகு, கேப்டன் விஜயகாந்தை கவுரவப்படுத்தும் விதமாக, விஜய் அவர் நடிக்கும் தி கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைக்க அனுமதித்தார். படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, படத்தின் முக்கிய காட்சியில், முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், விஎப்எக்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சிக்கலைஞர் கேப்டனை, ஏஐ தொழில்நுட்பத்தில் படங்களில் நடிக்க வைப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. எங்களிடம் முறையான அனுமதி பெறாமல், இதுபோன்ற தகவல்களை யாரும் வெளியிடாமல் தவிர்க்க வேண்டும். முறையான அனுமதி பெற்றே தகவல் வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டனை பயன்படுத்த, யாரும் இதுவரை எங்களிடம் முறையான அனுமதி வாங்கவில்லை, என்று தெரிவித்துள்ளார். தி கோட் படத்தில் விஜயகாந்த் நடிக்க, டைரக்டர் உள்ளிட்ட படக்குழு பிரமேலதாவிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று இதன்மூலம் தெரிய வந்துள்ளதால், கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்