விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த இந்த திரைப்படம், தமிழ்நாட்டைக் கடந்து வெளி மாநிலங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சீன மொழியிலும் இது டப் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு 2 திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் விஜய் சேதுபதி வருகிறார். இதுபோக ஏஸ் என்னும் திரைப்படத்திலும் அவர் நடித்திருக்கிறார். ஆறுமுக குமார் இதனை இயக்கியுள்ளார். இது போக பாண்டிராஜ் இயக்கத்திலும் தற்போது விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி விஜய் சேதுபதி, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். இவர் ஏற்கனவே, இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடிப்பதாக இருந்தது. இதற்கான படப்பிடிப்பும் தொடங்கி 10 நாட்கள் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனம் ஈர்த்த திரைப்படம் என்பதால் இந்த சீரிஸ் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதிலிருந்து மணிகண்டன் பின்வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்த நிலையில் தான் விட்டுப்போன அந்த சீரியஸை விஜய் சேதுபதியே இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் இந்த பரிட்சையில் விஜய் சேதுபதி இறங்கி இருப்பதாக கூறுகிறார்கள். அதேசமயம் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதால் இது சாத்தியமில்லை என்றும் ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.





