- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் தயாரித்த படங்கள் எனக்கு நஷ்டத்தையே தந்தன, அதற்காக நான் வருத்தப்பவில்லை - வெப் சீரிஸ்...

நான் தயாரித்த படங்கள் எனக்கு நஷ்டத்தையே தந்தன, அதற்காக நான் வருத்தப்பவில்லை – வெப் சீரிஸ் தயாரிப்பாளராக களம் இறங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அவர் நடித்த முதல் வெப் சீரிஸ் முத்து என்கிற காட்டான் வருகிற 27ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. காக்கா முட்டை ஆண்டவன் கட்டளை கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியவர் மணிகண்டன். அவருடன் பி அஜித்குமார் இருவரும் இணைந்து முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ்சை இயக்கியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் டிரெய்லரில் காட்டான் என்கிற கேரக்டர் குறித்து சில விஷயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வீரனா என பல்வேறு கோணங்களில் அந்த டிரெய்லரில் காட்டப்படுகிறது. முத்துவின் உண்மை முகமும் அவர் வாழ்க்கையில் செய்த கொடூரமான சம்பவங்களும் அந்த டிரெயிலரில் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

இந்த வெப் சீரிஸில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் காட்டான் வெப் சீரிஸ் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை என்னிடம் சொன்னபோது ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு நுணுக்கமான குறிப்பாக தான் அதை பகிர்ந்தார்.

அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்த தொடரில் பணி செய்த அனுபவம் ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை தந்தது. இதை பார்ப்போர் அனைவரும் இதன் மூலம் சிந்திக்க தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்து செல்வார்கள் என்று நான் மனதார நம்புகிறேன் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி மற்றும் பெங்காலி என 7 மொழிகளில் வெளியாகும் இந்த வெப் சீரிஸ்சை நடிகர் விஜய் சேதுபதி சொந்தமாக தயாரித்துள்ளார். முதன் முறையாக வெப்சீரிஸ் தயாரிப்பாளராக தனது அனுபவம் குறித்தும் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இதற்கு முன்பு நான் தயாரித்த படங்கள் எனக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தின.

சங்கத்தமிழன் படத்தால் எனக்கு 1.75 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆரஞ்சு மிட்டாய் மேற்கு தொடர்ச்சி மலை ஜூங்கா போன்ற படங்களும் எனக்கு நஷ்டத்தையே தந்தன. இருப்பினும் இந்த படங்கள் எனக்கு பிடித்தமானவை என்பதால் அதற்காக எந்த வருத்தமும் நான் படவில்லை. காட்டான் வெப்சீரிஸ் தயாரிக்க ஹாட் ஸ்டார் நிறுவனம் நிதி வழங்கி உள்ளது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்