- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுகவின் சீக்ரட் ஓனர் யாருன்னு தெரியுமா? தவெக பொதுக்குழு கூட்டத்தில் கிண்டலாக பேசிய நடிகர் விஜய்!

திமுகவின் சீக்ரட் ஓனர் யாருன்னு தெரியுமா? தவெக பொதுக்குழு கூட்டத்தில் கிண்டலாக பேசிய நடிகர் விஜய்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று காலை நடந்தது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் திமுக பாஜக கட்சிகளை நேரடியாக தாக்கிப் பேசினார்.

தவெக பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியைப் பற்றி கேட்டால் மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும்.

- Advertisement -

பெண்கள் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை வேறு அப்பா என்று கூப்பிடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். தினம் தினம் பல கொடுமைகளை சந்திக்கிற தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களின் அரசியல் ஆட்சிக்கு, அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.

இங்கு நீங்கள்தான் இப்படி என்றால் உங்கள் சீக்ரெட் ஓனர் மாண்புமிகு மோடி ஜீ அவர்கள் அதற்கு மேலே இருக்கிறார். உங்கள் பெயரை சொல்வதற்கு எனக்கு என்ன பயமா? மத்தியில் ஆளுகிறவர் மாநிலத்தில் ஆளுகிறவர் என்று சொல்கிறோம். மத்தியில் காங்கிரஸ் ஆளுகிறதா, மாநிலத்தில் அதிமுக ஆட்சி செய்கிறதா, இதை கூட சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்களா?.

- Advertisement -

மோடிஜி அவர்களே, தமிழர்கள் தமிழ்நாடு என்றால் ஏன் ஜி உங்களுக்கு அலர்ஜி? ஜிஎஸ்டி தொகையை மட்டும் வாங்கிக்கிறீங்க. ஆனா பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க மாட்டேங்கிறீங்க. மும்மொழிக் கொள்கையை திணிக்கறீங்க. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் கொண்டு வந்த போது உங்கள் திட்டம் என்ன என்று தெரிந்து விட்டது. தமிழ்நாட்டை நீங்கள் எந்த வழியில் மாற்ற நினைக்கிறீர்கள் என்று.

தமிழ்நாட்டை ரொம்பவும் ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணுங்க பிரதமர் சார். 2026ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும். தவெக ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்வோம். தொழிலாளர்கள் பக்கம் நிற்போம். எங்கள் அரசியலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று நடிகர் விஜய் அந்த கூட்டத்தில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்