- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் தேர்தலில் டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும் இடையேதான் போட்டி, கொளுத்திப் போட்ட நடிகர் விஜய் - கொதித்து...

வரும் தேர்தலில் டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும் இடையேதான் போட்டி, கொளுத்திப் போட்ட நடிகர் விஜய் – கொதித்து எழுந்த தமிழக அரசியல் கட்சிகள்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார்.

வழக்கமாக தவெக கூட்டங்களில் பேசும் விஜய் திமுக பாஜக கட்சிப் பெயர்களை சொல்லாமல் பாயாசம் பாசிசம் என்று அந்த கட்சிகளின் மறைமுகமாக குறிப்பிடுவார். பிறகு ஒரு கட்டத்தில் அரசியல் எதிரி திமுக கொள்கை எதிரி பாஜக என்றும் வெளிப்படையாக பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சித்த நிலையில் நேற்று அதற்கு பதிலடி தந்தார்.

- Advertisement -

அதனால் நேற்றைய பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், முதலமைச்சர் ஸ்டாலின் சார், நரேந்திர மோடி ஜீ என்று பெயர்களை குறிப்பிட்டு சொன்னார். லியோ லியோ லியோ லியோ ன்னு ஒரு படத்துல என் பேரை சொன்ன மாதிரி நீங்கதானே பேரை சொல்லி கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்குங்க என்றார்.

அதே போல் மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே வீராப்பாக பேசினால் போதாது அவர்களே ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே என்று ஸ்டாலினை பயங்கரமாக கலாய்த்தார். வழக்கமான பேச்சை காட்டிலும் நேற்று விஜயின் பேச்சில் அதிக கிண்டல் கேலி வெளிப்பட்டது.

- Advertisement -

விஜயின் பேச்சின் இறுதியில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வித்யாசமாக இருக்கும். டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும் மட்டும்தான் போட்டி என்றும் அதிரடியாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது. தேசிய கட்சிகளுக்கும் ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது.

தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக, தேசிய கட்சிகளான பாஜக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி வலது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மறுமலர்ச்சி திமுக தேமுதிக என பல கட்சிகளுக்கு விஜயின் இந்த பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சியாகன திமுகவை மட்டுமே எதிர்ப்பதாக விஜய் கூறியிருப்பதன் மூலம் மற்ற கட்சிகளை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது அந்த கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்