- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வாரமாக தீவிர பயிற்சி எடுத்த நடிகர் விஜய், அவரே இப்படீன்னா கூட நடிச்சவங்களோட கதி?...

ஒரு வாரமாக தீவிர பயிற்சி எடுத்த நடிகர் விஜய், அவரே இப்படீன்னா கூட நடிச்சவங்களோட கதி? – GOAT படம் ஷூட்டிங்கில் நடந்த தரமான சம்பவம்

- Advertisement -

நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இன்னும் 10 சதவீத படப்பிடிப்பே பாக்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்ட படக்குழு, அதற்கான ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்தது.

ஆனால் படக்குழு ரஷ்யா செல்வதில் தாமதம் நீடிக்கிறது. அதற்கான விசா உள்ளிட்டவை பெறுவதில் தாமதம் நீடிப்பதால் அதற்கு முன்னதாக சில காட்சிகளை சென்னையிலும், மீதி காட்சிகளை ஐதராபாத்திலும் முடித்து விட்டு, அதன்பிறகு ரஷ்யா செல்லலாம் என திட்டமிட்டுள்ளனர். இதற்கான காரணம், விஜய் அடுத்த மாதம் தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டை, மதுரையில் நடத்த திட்டமிட்டு இருப்பதுதான்.

- Advertisement -

விஜய் படங்களை பொருத்தவரை சண்டை காட்சிகளும், நடன காட்சிகளும் மிக சிறப்பாக இருக்கும். துவக்கத்தில் இருந்தே நடிகர் விஜய், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், அவரது படங்களில் அவரது நடனம் அசத்தலாக இருந்து வருகிறது. உடன் நடிக்கும் நடிகைகளே ஆட திணறும் மூவ்மெண்டுகளை மிக அலட்சியமாக, மிக சாதாரணமாக ஆடிவிடுவார் நடிகர் விஜய்.

இதற்கு உதாரணமாக ஆல்தோட்ட பூபதி நானடா, சரக்கு வெச்சிருக்கேன், இறக்கி வெச்சிருக்கேன், வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன், தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன் என பல பாடல்களில் விஜய் நடனம் ரசிகர்களால் பலத்த வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இப்போது விஜய் நடித்து வரும் GOAT படத்திலும் அதுபோன்ற ஒரு சூப்பர் நடன பாட்டு இடம்பெறுகிறது. இதற்காக தெலுங்கில் இருந்து பிரபல கோடியோகிராபர் சேகர் வரவழைக்கப்பட்டுள்ளார். இவர் குண்டூர்காரம் படத்தில் வைரலான அந்த பாட்டுக்கு நடனம் அமைத்தவர். ஷாருக்கான், சல்மான்கான் என ஏகப்பட்ட விவிஐபிகள், நடன இயக்குநர் சேகரை தங்களுடன் பணிபுரிய அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், GOAT படத்தில் சேகர் நடனம் அமைத்துள்ள ஒரு பாடலுக்கு விஜய் நடனமாடி இருக்கிறார். பிரசாத் ஸ்டுடியோவில் இதற்காக பிரமாண்ட செட் போட்டு காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக, விஜய் தனது வீட்டில் ஒரு வாரம் நடன பயிற்சி எடுத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவலும் வௌியாகி இருக்கிறது. அப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு வந்து, பாடல் காட்சியில் தூள்கிளப்பி இருக்கிறார் விஜய்.

- Advertisement -

சற்று முன்