- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாடு பல பேருக்கு தண்ணீ காட்டுன ஸ்டேட் சார், பார்த்து கவனமா செய்ங்க சார் -...

தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீ காட்டுன ஸ்டேட் சார், பார்த்து கவனமா செய்ங்க சார் – மத்திய பாஜக அரசை மேடையில் எச்சரித்த நடிகர் விஜய்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள திருவான்மியூரில் நடந்தது. இந்த விழாவில் அந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக அரசையும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் பேசத் துவங்கிய தவெக தலைவர் நடிகர் விஜய், கதறல் சத்தம் எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பியபடி தனது பேச்சை துவங்கினார். தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை மேற்கோள் காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார்.

- Advertisement -

தமிழக அரசியலில் புதிய வரலாற்றைப் படைக்க நீங்கள் தயாராக வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா, இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா. காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று மக்கள் பிரச்சினையை மடைமாற்றி மன்னர் ஆட்சி நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜிஎஸ்டி வரியை வாங்கிக்கொண்டு, மாணவர்கள் படிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை. தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கையை மோடி குறைக்க பார்க்கிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களின் போராட்டங்கள் பெருகி விட்டது. திமுகவை எதிர்க்கும் எல்லாவிதமான மக்களின் போராட்டங்களுக்கும் தவெக துணை நிற்கும். நாங்கள் ஆதரவு தருவோம்.

- Advertisement -

மோடி சார் தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க சார். தமிழ்நாடு பல பேருக்கு தண்ணீ காட்டுன ஸ்டேட்ட சார். பார்த்து கவனமா செய்ங்க சார். தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்ததும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம். சட்டம் ஒழுங்கு கல்வியில் முழு கவனம் செலுத்துவோம். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க செய்வதே நமது நோக்கம்.

வருகின்ற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மிகவும் வித்தியாசமான ஒரு தேர்தலாக இருக்கும். இந்த தேர்தலில் டிவிகே கட்சிக்கும் டிஎம்கே கட்சிக்கும் தான் போட்டி என்று நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நடிகர் விஜய் அங்கிருந்த கட்சியினருடன் அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்