- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு… இதுக்கு கூட அவருக்கு நேரமில்லையா? வருத்தப்படும் ரசிகர்கள்!

நடிகர் விஜய் மீது எழுந்த பகீர் குற்றச்சாட்டு… இதுக்கு கூட அவருக்கு நேரமில்லையா? வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இதுவரை 68 படங்களில் அவர் நடித்த நிலையில் இப்போது அவரது 69வது படம் ஜனநாயகன் வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ம் தேதி மலேசியாவில் கோலாகலமாக நடைபெற தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது ஒவ்வொரு செயல்பாடும் நடவடிக்கையும் தமிழக மக்கள் மத்தியில், அரசியல் வட்டாரத்தில் சினிமா துறையினர் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. அடிக்கடி அவர் இணையத்தில் வைரலாகி வருவதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளர் மற்றும் பல வெற்றி படங்களை கொடுத்தவர் ஏவிஎம் சரவணன். ஏவிஎம் நிறுவனம் என்றாலே தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு மரியாதைக்குரிய முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் ஏவிஎம் சரவணன் 86 வயதான நிலையில் மூப்பு காரணமாக நேற்று காலை காலமானார்.

அவரது மறைவு தமிழ் சினிமாத் துறையினர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர்கள் ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா விஷால் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ஏவிஎம் ஸ்டுடியோவில் வைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி தங்களது வருத்தத்தையும் தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன் தனியாக ஒரு வீடியோ வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏவிஎம் ஸ்டுடியோக்கு நேரில் வந்து தனது இரங்கலை தெரிவித்தார். ஆனால் நடிகர் விஜய் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. தனது வலைதள பக்கத்திலும் அவர் தனது இரங்கலை பதிவு செய்யவில்லை. நேரில் வர அவருக்கு நேரமில்லை. ரசிகர்கள் தொல்லை என்று காரணம் சொன்னாலும், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்து நமது இரங்கலை தெரிவித்து இருக்கலாமே?

அதற்குக் கூட விஜய்க்கு நேரமில்லையா என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ஒரு நடிகராக மட்டுமின்றி அரசியல் தலைவராகவும் உள்ள விஜய் இதுபோன்ற விஷயங்களில் தவிர்ப்பது அவருக்கும் அவரது கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று பலரும் விமர்சிக்கின்றனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வேட்டைக்காரன் என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்