- Advertisement -
Homeபொழுதுபோக்குபடை தலைவன் படத்தில் என்னுடன் இணைந்து வடிவேலு நடிப்பதாக இருந்தது, அதற்கு கேப்டன் ஒத்துக்கொண்டாரா? -...

படை தலைவன் படத்தில் என்னுடன் இணைந்து வடிவேலு நடிப்பதாக இருந்தது, அதற்கு கேப்டன் ஒத்துக்கொண்டாரா? – அவரது மகன் சண்முக பாண்டியன் ஓபன்டாக்!

- Advertisement -

என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமானவர் நடிகர் வடிவேலு. தொடர்ந்து ராஜ்கிரண் தனது படங்களில் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். அதே போல் இயக்குனர் ஆர்வி உதயகுமார் வடிவேலுவை தனது படங்களில் நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் இவர்களது படங்கள்தான் வடிவேலுவுக்கு ஆதாரமாக இருந்தது.

ஆனால் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் கவுண்டமணி செந்தில் நடித்ததால், வடிவேலு நடிக்க எந்த கேரக்டரும் இல்லை. ஆனால் சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்துடன் நடிக்க மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார் வடிவேலு.

ஏனெனில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தால் மிக விரைவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறலாம் என்பதே வடிவேலுவின் திட்டம். அதை அவரே சமீபத்தில் கேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். அதனால் விஜயகாந்த் யோசித்துவிட்டு, நான் வரும் காட்சிகளில் எனக்கு குடை பிடித்து வரும் ஒரு கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வையுங்கள் என்று இயக்குனருக்கு கேப்டன் ஐடியா கொடுத்திருக்கிறார்.

ஆனால் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு, கேப்டனை ஒருகட்டத்தில் தாறுமாறாக விமர்சித்தார் நடிகர் வடிவேலு. இதுகுறித்து விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன், அவர் நடித்துள்ள படை தலைவன் பட நிகழ்ச்சியின் போது பேசியிருக்கிறார். அப்போது நடிகர் வடிவேலு குறித்து தனது அப்பா விஜயகாந்த் கூறிய விஷயங்களை மகன் சண்முகப்பாண்டியன் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் சண்முகபாண்டியன் கூறியதாவது, ஆரம்ப காலத்தில் வடிவேல் சாருக்கு அப்பா உதவிகள் செய்தார். ஆனால் அவருடைய திறமையால்தான் முன்னுக்கு வந்தார். அப்பாவை அவர் விமர்சனம் செய்து பேசியது தவறுதான். அது எங்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வடிவேலு இப்படி பேசிவிட்டார் என்றதும் அப்பா முதலில் வருத்தப்பட்டார். பிறகு சரி அவர் நிலைமை எப்படியோ அதனால்தான் அப்படி பேசி விட்டார் விட்டுவிடுங்கள் என்றார். அப்பா அப்படி சொன்ன பிறகு நாங்கள் எதுவும் பேசக்கூடாது.

அப்பா ஏதாவது டென்ஷனா இருந்தால் கூட வடிவேலு காமெடி தான் பார்ப்பார். என் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். அப்பாவும் ஓகே சொன்னார். ஆனால் எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் என்று நினைத்ததால் அவரிடம் இது குறித்து பேசவில்லை. வடிவேலு பட வாய்ப்புகளை அப்பா எப்போதும் தடுத்ததில்லை. ஏதாவது வாய்ப்பு வந்தால் கூட வடிவேலுவுடன் பேசிப் பாருங்கள் என்றுதான் சொல்லி அனுப்பி வைப்பார் என்று சண்முக பாண்டியன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்