- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சிக் கலைஞரின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? விஜயராஜ் விஜயகாந்த் இந்த ரெண்டுமே இல்லே -...

புரட்சிக் கலைஞரின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? விஜயராஜ் விஜயகாந்த் இந்த ரெண்டுமே இல்லே – அட கேப்டனோட உண்மையான பெயர் அதுவா…?

- Advertisement -

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்த நாளை தேமுதிகவினர் மட்டுமின்றி அவரது நடிப்பை வெகுவாக ரசித்த ரசிகர்களும் தங்களது வலைதள பக்கங்களில் அவரது புகைப்படத்தை வீடியோவை பகிர்ந்து தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு கலைஞன், மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களை விட்டு மறைவதே இல்லை.

நடிகர் விஜயகாந்தை பொருத்த வரை அவரது உதவும் குணம்தான் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. எப்போதுமே தன்னை பார்க்க வருபவர்களிடம் சாப்பிட்டீங்களா என்று கேட்பதும், தன்னை தேடி வந்தவர்களை உணவு தந்து உபசரிப்பதும் கேப்டனின் வழக்கம். இந்த குணத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் இருந்து அவர் கற்றுக்கொண்டார்.
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் கேப்டன் விஜயராஜ் என பல பெயர்களை அவரை அழைத்தாலும் அவரது உண்மையான பெயர் பலருக்கும் தெரியாது. ஏனெனில் பெற்றோர் அவருக்கு குழந்தையாக இருக்கும்போது வைத்த பெயர் வேறு. பிறகு அது மாறி மாறி கேப்டன் என்று இப்போது ரசிகர்களிடம் புகழ் பெற்றிருக்கிறது.

- Advertisement -

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி – ஆண்டாள் தம்பதிக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகள்கள் பிறந்தனர். இதில் முதல் மகள் விஜயலட்சுமி. 2வது பிறந்த ஆண் வாரிசுகள் நாகராஜ் மற்றும் நாராயணன். அவர்களுக்கு பின்பு நான்காவதாக பிறந்தபெண் குழந்தை திருமலா தேவி. இந்த 4 பேரும்தான் ஆண்டாள் – அழகர்சாமி தம்பதியின் பிள்ளைகள்.

கடைசியாக திருமலா தேவி பிறந்த சில வாரங்களுக்கு பின், ஆண்டாள் அம்மாள் நோய்வாய்ப்பட்டு மறைந்து விட்டார். அதன் பிறகு அழகர்சாமி, ருக்மணி அம்மையாரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள் 3 பெண் குழந்தைகள் என 7 பேர் பிறந்தனர். மொத்தம் 11 குழந்தைகள் அழகர்சாமியின்பிள்ளைகளாக வளர்ந்தனர்.

- Advertisement -

முதல் மனைவி ஆண்டாளுக்கு பிறந்த 2வது ஆண் குழந்தைக்கு தனது அப்பாவின் பெயரை அழகர்சாமி சூட்டினார். நாராயணன் என்பது தாத்தாவின் பெயர் என்பதால் பலரும் விஜயராஜ் என்று புது பெயரிட்டு நாராயணனை அழைக்க தொடங்கினார். ஆனால் அவரது அக்கா விஜயலட்சுமிக்கு மட்டும் தன் தம்பியை நாராயணா என்று அழைப்பதே பிடிக்கும். அந்த நாராயணனன் தான் சினிமாவுக்கு வந்த பிறகு தான் விஜயகாந்த் என்று மாறினார். உண்மையில் கேப்டனின் உண்மையான பெயர் விஜயராஜ், விஜயகாந்த் அல்ல. அவரது உண்மையான பெயர் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்