- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க விஜய் நான் வரேன்… மாற்றியமைக்கப்பட்ட நடிகர் விஜய் பயண திட்டம் - தளபதி உங்க...

உங்க விஜய் நான் வரேன்… மாற்றியமைக்கப்பட்ட நடிகர் விஜய் பயண திட்டம் – தளபதி உங்க ஊருக்கு எப்போ வர்றாருன்னு தெரியுமா?

- Advertisement -

ஆரம்பத்தில் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் என்பது தமிழக அரசியல் கட்சிகளால் மிக சாதாரணமாக தான் பார்க்கப்பட்டது. உலகநாயகன் என்று கொண்டாடப்பட்ட நடிகர் கமல்ஹாசனே தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் விஜய் எத்தனை நாள் காலம் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்றுதான் அலட்சியமாக நினைத்தனர்.

ஆனால் விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் அரசியல் மாநாடு மற்ற கட்சிகளை கதிகலங்க வைத்தது. மதுரையில் நடந்த 2வது மாநாட்டில் திரண்ட மக்கள் கூட்டம் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளை அவஸ்தைப்படுத்தியது. இப்போது திருச்சி அரியலூர் நாகை திருவாரூரில் அவருக்கு அலைகடல் என திரண்ட கூட்டம் 2026 தேர்தலில் வெற்றி அவருக்கு தானா என்று கேட்க வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமை ஒருநாள் மட்டுமே உங்க விஜய் நான் வரேன் என்ற மக்கள் சந்திப்பு பயணத்தில் மக்களை மாவட்டம் வாரியாக சந்தித்து வருகிறார். முதலில் ஒரு நாளில் 3 மாவட்டங்கள் என திட்டமிட்டிருந்த அவரது சுற்றுப் பயணம் இப்போது 2 மாவட்டங்கள் என குறைக்கப்பட்டு, டிசம்பர் 20 வரை என்பது 2026ம் ஆண்டு பிப்ரவரி 21 வரை என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் தேதிகளை தவெக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படியே இனி தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க மாவட்டம் வாரியாக வரப்போகிறார். நாளை மறுதினம் வருகிற 27ம் தேதி நடிகர் விஜய் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து அக்டோபர் 5ம் தேதி வேலூர் ராணிப்பேட்டை 11ம் தேதி பாண்டிச்சேரி கடலூர் 18ம் தேதி தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் 25ம் தேதி திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் விஜய் மக்களை சந்திக்கிறார்.

- Advertisement -

தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி பெரம்பலூர் கள்ளக்குறிச்சி, 8ம் தேதி கிருஷ்ணகிரி திருப்பத்தூர், 15ம் தேதி விழுப்புரம் திருவண்ணாமலை 22ம் தேதி சேலம் தர்மபுரி 29ம் தேதி தஞ்சை மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து வருகிற டிசம்பர் 7ம் தேதி புதுக்கோட்டை திண்டுக்கல் 13ம் தேதி சிவகங்கை ராமநாதபுரம் 20ம் தேதி திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி மதுரை தேனி 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், பிப்ரவரி 7ம் தேதி தென்காசி விருதுநகர் 14ம் தேதி கோவை நீலகிரி, பிப்ரவரி 21ம் தேதி செங்கல்பட்டு சென்னை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடிகர் விஜய் தனது முதல் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை நிறைவு செய்கிறார்.

- Advertisement -

சற்று முன்