நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் கடந்த 2 ஆண்டுகளாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறார். 2023ம் ஆண்டு 2024ம் ஆண்டை தொடர்ந்து இன்று விஜய் கல்வி விருது வழங்கும் விழா, சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஓட்டலில் நடந்து வருகிறது.
இன்று துவங்கிய 3ம் ஆண்டு கல்வி விருது நாள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, படிப்பு என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியம்தான். அதற்கான ஒரு படிப்பு மட்டுமே லட்சியமாக சாதனையாக நினைக்க கூடாது. ஒரே விஷயத்தை நினைத்து நினைத்து உங்கள் மனசை பாரமாக்கி கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. அதில் நீங்க சாதிக்க வேண்டியது பல விஷங்கள் இருக்குது. அதனால் உங்க மைண்டை இப்பவே ஸ்ட்ராங்கா வெச்சுக்குங்க. டெமாக்கரசியாக வெச்சுக்க கத்துக்குங்க. ஏன்னா டெமாக்கரசியாக இருந்தால்தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்துல இருக்கிற எல்லா விஷயங்களும் சரி ஒரு ப்ரீடம் ஆக இருக்க முடியும்.
அதுமட்டும் இல்லே முறையான ஒரு டெமாக்கரசி இருந்தாலே போதும். எல்லாருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும். இதில் முதல் படியாக உங்கள் வீட்டில் உள்ள எல்லோருக்கும் சொல்லுங்க. அவங்கவங்க ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்யச் சொல்லுங்க.
ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்றதுன்னா பெரிய ஒரு விஷயம் எல்லாம் கிடையாது. ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம்தான். நல்லவங்க நம்பிக்கையானவங்க இதுவரை ஊழலே செய்யாதவங்க யாருன்னு பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்க அவ்வளவுதான். ரொம்ப சுலபமான விஷயம்தான். அதுதான் அந்த கடமை என்று நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியிருக்கிறார்.





