- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி ஆட்சிக்கு வருபவர்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன் - தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு...

இனி ஆட்சிக்கு வருபவர்கள் அதை செய்வார்கள் என்று நம்புகிறேன் – தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு மறைமுகமாக ஆதரவாக பேசிய நடிகர் விஷால்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் என வலம் வரும் நடிகர் விஷால் இப்போது அரசன் என்ற படத்தில் நடித்து வந்தார். இயக்குனர் சுந்தர் சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் அந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால் நடிகர் விஷால் ஏற்கனவே அவரே ஹீரோவாக நடித்து இயக்கி வரும் மகுடம் என்ற படத்தின் படப்பிடிப்பில் சில வாரங்களாக பிஸியாக இருந்து வருகிறார். ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். தனது ஓட்டை போடுவதற்காகவே அவர் அங்கிருந்து சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளை ஓட்டி வந்த நடிகர் விஷால் தனது பகுதிக்குட்பட்ட ஓட்டுச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது, நான் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்துவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு சைக்கிளின் வருவது பிடிக்கும். ஏற்கனவே பலமுறை சைக்கிளில் வந்து ஓட்டு போட்டு இருக்கிறேன்.

எல்லா தொகுதிகளிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்னைகளை எல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் நமது வாக்கை நாம் கண்டிப்பாக செலுத்த வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்தார்கள் என்றால் நடிகர்கள் நடிகர்களாகவே இருப்போம். ஆனால் அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.

- Advertisement -

அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். நிறைய இடங்களில் குப்பை கொட்டி கிடக்கிறது. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நாங்களே இறங்கி வேலை செய்துள்ளோம். ஆட்சிக்கு வருபவர்கள் ஐந்து வருடங்களில் எல்லா தொகுதிகளிலும் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் விஷால் அப்போது கூறியிருக்கிறார்.

நடிகர் விஷால் ஏற்கனவே எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார். அரசியல்வாதிகள் தங்களது வேலையை சரியாக செய்யாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்று மறைமுகமாக தவெக தலைவர் நடிகர் விஜய்க்கும் மறைமுகமாக தனது ஆதரவை விஷால் தெரிவித்திருக்கிறார் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்