- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி - கூவாகம் கூத்தாண்டவர் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால்...

மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி – கூவாகம் கூத்தாண்டவர் விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால் திடீர் மயக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சமீபத்தில் அழைத்து விடுத்தார். மேலும் அந்த சங்க கட்டிடத்தில் என் திருமண விழாவும் நடைபெறும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கிய படம் மதகத ராஜா. இந்த படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். பல காரணங்களால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, பெரிய வரவேற்பை வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த படத்தின் ரிலீஸ்க்கு முன் நடிகர் விஷால் பிரமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நோய்வாய்பட்டவராக கை நடுக்கத்துடன் அவர் மைக் பிடித்து பேசியது இணையத்தில் செம வைரலானது. பிறகு சில நாட்களிலேயே விஷால் சகஜமான நிலைக்கு வந்துவிட்டார். வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் கைகள் நடுங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் ஒரு தரப்பினர், இதுவும் ஒரு விளம்பர யுக்திதான். விஷால் வேண்டுமென்றே கைகள் நடுங்குவது போல் செய்து படத்துக்கு பெரிய அளவில் கவனம் ஏற்படுத்தி விட்டார் என்றும் விமர்சித்தனர். ஆனால் என் கை நடுக்கத்தை பார்த்து மக்களின் அபரிதமான அன்பை புரிந்துக்கொண்டு சந்தோஷப்பட்டேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கிடையே நேற்று கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதில் நேற்று திருநங்கைகள் பங்கேற்ற மிஸ் திருநங்கை 2025 அழகிப் போட்டி என்ற முக்கிய நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது மேடையில் திருநங்கைகளுடன் பேசிக்கொண்டு இருந்த நடிகர் விஷால் திடீரென மயங்கி கீழே சரிந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மேடையில் இருந்து கை தாங்கலாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். இப்போது நடிகர் விஷால் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓ அழகுல மயங்குவது என்பது இதுதானா என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வெளியிட்டு நடிகர் விஷாலை கலாய்த்து வருகின்றனர். இதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்