- Advertisement -
Homeபொழுதுபோக்குபூங்கொத்து பொன்னாடை புத்தகம் என எதுவுமின்றி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை சொன்ன நடிகர்...

பூங்கொத்து பொன்னாடை புத்தகம் என எதுவுமின்றி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை சொன்ன நடிகர் விஷால் – என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றது முதல் தினமும் தமிழ் சினிமாத் துறையை சார்ந்த பல நடிகர்கள் நடிகைகள் திரைப்பட சங்க அமைப்புகளின் நிர்வாகிகள் சினிமா தொழில் துறையினர் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் சினிமாத்துறை சார்ந்த பல கோரிக்கைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் விஜயை தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவியது குறித்து குறித்தும் ஒரு கடிதத்தையும் நடிகர் விஷால் தனது எக்ஸ் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

தனது எக்ஸ் பதிவில் அதுகுறித்து நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, அன்புக்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களே. லயோலா கல்லூரி காலத்திலிருந்து நான் உங்களை டார்லிங் என்றுதான் அழைத்து வருகிறேன். அந்த அன்பான அழைப்பு இன்னும் மாறவில்லை. வளர்ந்து வரும் நட்சத்திரமாக உங்களை எனக்கு தெரிந்ததிலிருந்து பல சவால்களையும் விமர்சனங்களையும் உங்கள் மௌனத்தாலும் வெற்றியாலும் கடந்தீர்கள்.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை அடைந்து பின்னர் தமிழ்நாட்டில் மாண்புமிகு முதல்வராக உயர்ந்தது வரையிலான உங்கள் பயணத்தை நான் கண்டு வருகிறேன். இன்று உங்கள் பதவியும் பொறுப்பும் மாறி இருக்கலாம். ஆனால் உங்கள் இயல்பு மாறவே இல்லை. உங்களை சந்தித்ததும் அதே பழைய அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

- Advertisement -

கருணாநிதி ஜெயலலிதா ஸ்டாலின் எனது அருமை உதயாவின் வரிசையில் நம் மாநிலத்தின் முதலமைச்சரை டார்லிங் என்று அழைத்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எனக்குள் இருக்கும் அந்த ரசிகனின் உணர்வு என்றும் மாறாது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். வழக்கமாக வழங்கப்படும் பூங்கொத்து மற்றும் பொன்னாடையை ஏற்காமல் அதற்கு பதிலாக அந்த பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள பின் தங்கிய நிலையில் உள்ள 3 பெண் குழந்தைகளின் கல்விக்கு உங்கள் பெயரிலேயே நான் உதவியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

அவர்கள் உங்களை நினைத்து என்றும் பெருமை கொள்வார்கள். மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் முதலமைச்சர் அவர்களே. உங்கள் பதவி காலத்தில் நேர்மையான மாற்றங்களும் வளர்ச்சியும் பெருகட்டும். தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றத்தை காணட்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அந்த பதிவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்