- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது பிறந்த நாளை திருமண நாளாக மாற்றிய நடிகர் விஷால், அவரது வருங்கால மனைவி நடிகை...

தனது பிறந்த நாளை திருமண நாளாக மாற்றிய நடிகர் விஷால், அவரது வருங்கால மனைவி நடிகை சாய் தன்ஷிகா தான் – உற்சாகத்தில் விஷால் ரசிகர்கள்!

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், எனக்கு திருமணம் முடிவாகி விட்டது. இன்னும் 4 மாதங்களில் என் திருமணம் கண்டிப்பாக நடக்கும். நான் அவரை ஒரு மாதமாக காதலித்து வருகிறேன். அவரது வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது என்று சந்தோஷமாக தனது திருமணம் குறித்து அறிவித்தார்.

கடந்த 1977ம் ஆண்டில் பிறந்த நடிகர் விஷாலுக்கு இப்போது 47 வயதான நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்யாமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய கேள்வியாக நீடித்து வந்தது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்த பின்பு அந்த மண்டபத்தில்தான் எனது திருமணம் என ஏற்கனவே விஷால் கூறியிருந்தார்.

- Advertisement -

அதே போல் 9 ஆண்டுகள் கடந்திருந்தாலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் சங்கத்தின் பொதுச் செயலாளராக நடிகர் விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்து இருப்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அரசல் புரசலாக நடிகை சாய் தன்ஷிகாவை தான் அவர் திருமணம் செய்யப் போவதாக தகவல் பரவிய நிலையில் அது இப்போது உறுதியாகி விட்டது.

சென்னையில் இன்று மாலை சாய் தன்ஷிகா முக்கிய கேரக்டரில் நடித்த யோகி டா படத்தின் விழா நடந்தது. இதில் நடிகர் விஷால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறுகையில், தன்ஷிகா நல்ல ஹைட். உயர்ந்த கதாநாயகி. அவருக்கு அருகில் சரியான ஆள்தான் இருக்கிறார் என்று விஷால், சாய் தன்ஷிகா ஜோடியாக இருப்பதை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

- Advertisement -

அடுத்து பேசிய நடிகர் ராதாரவி, வெரி குட் செலக்சன் என்றும் அவர்களை சுட்டிக்காட்டி வாழ்த்திப் பேசினார். இதைக் கேட்டு மேடையில் இருந்த நடிகர் விஷால் வெட்கப்பட்டார். மேலும் இந்த விழாவில் நடிகை சாய் தன்ஷிகா பேசும்போது விஷாலுடன் தனது திருமணம் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.

வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷாலின் பிறந்தநாள். தனது பிறந்தநாளையே திருமண நாளாக நடிகர் விஷால் மாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைத்துறை சார்ந்த பலரும் விரைவில் மணமக்களாக போகிற நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை வாழ்த்தி வருகின்றனர். விஷால் ஏற்கனவே அறிவித்தபடி புதியதாக கட்டப்பட்டுள்ள நடிகர் சங்க கட்டிட மண்டபத்தில்தான் இவர்களது திருமணம் வரவேற்பு விழா நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்