- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷால் நடிக்கும் 35வது படம் … மீண்டும் பழைய டைட்டிலா? தமிழ் சினிமாவில் தொடரும்...

நடிகர் விஷால் நடிக்கும் 35வது படம் … மீண்டும் பழைய டைட்டிலா? தமிழ் சினிமாவில் தொடரும் டைட்டில் பஞ்சம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நீண்டகாலமாக கதை பஞ்சம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. பாரதிராஜா கே பாலசந்தர் பாலுமகேந்திரா மகேந்திரன் போன்றவர்கள் நல்ல கதைகளை உருவாக்கி படமாக ரசிகர்களுக்கு தந்தனர். இப்போதும் முதல் மரியாதை படம் ரசிக்க வைக்கிறது. கிழக்கு சீமையிலே படம் திகைக்க வைக்கிறது. சிந்து பைரவி மனதில் நிற்கிறது.

இந்த இயக்குனர்களுக்கு பிறகு விசு வி சேகர் படங்கள் எல்லாமே ஃபேமிலி டிராமாக்கள் திரைக்கதைகளாக மாற்றப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. நல்ல கதைகளை திரைக்கதைகளாக திரையில் கொண்டு ரசிகர்களை பல இயக்குனர்கள் உற்சாகப்படுத்தினர். காமெடி காதல் சென்டிமென்ட் சமூகம் சார்ந்த இந்த படங்கள் எவர்கிரீன் படங்களாக இருந்தன.

- Advertisement -

ஆனால் பல ஆண்டுகளாக நல்ல கதைகள் என்பதே தமிழ் சினிமாவில் இல்லாமல் போய்விட்டது. கதைக்கு பஞ்சம் வந்துவிட்டது. அதே நேரத்தில் காக்கா முட்டை அழகர்சாமியின் குதிரை டூரிஸ்ட் ஃபேமிலி சித்தா பண்ணையாரும் பத்மினியும் குட்நைட் லவ்வர் லப்பர் பந்து பார்க்கிங் போன்ற சில படங்கள் வந்து தமிழ் சினிமா ரசிகர்களை ஆசுவாசப்படுத்துகின்றன.

நல்ல கதைகளுக்குதான் பஞ்சம் என்றால் படத்தின் டைட்டில்களுக்கு அதைவிட பஞ்சம் வந்து விட்டது. ரஜினி நடிக்கும் படங்களுக்கு அவர் நடிக்கும் கேரக்டர் பெயர்தான் டைட்டிலாக பெரும்பாலும் இருக்கிறது. கமல் விஜய் சூர்யா தனுஷ் அஜீத்குமார் என பல ஹீரோக்களுக்கு பெரும்பாலும் அவர்களது கேரக்டர் பெயர்தான் டைட்டிலாக உள்ளது.

- Advertisement -

அப்படி டைட்டில் வைக்க முடியாத பட்சத்தில் பழைய படங்களின் டைட்டில்களை வைத்து விடுகின்றனர். கதைக்கே யோசிக்காத இயக்குனர்கள், டைட்டிலுக்கு யோசிப்பதா என்ற மனநிலையில் பழைய பட டைட்டில்களை எடுத்து கொள்கின்றனர். கூலி பராசக்தி மதராஸி வேலைக்காரன் வேட்டைக்காரன் மாவீரன் காக்கிச்சட்டை ஹீரோ விக்ரம் எதிர்நீச்சல் என ஏராளமான டைட்டில்களை உதாரணமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போது நடிகர் விஷால் துஷாரா விஜயன் அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படம் உருவாகிறது. இது விஷாலின் 35வது படம். இந்த படத்துக்கு மகுடம் என டைட்டில் வைத்துள்ளனர். கடந்த 1992ம் ஆண்டில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான படம் மகுடம். இதில் சத்யராஜ் 2 வேடங்களிலும் பானுப்பிரியா கவுண்டமணி மனோரமா நெப்போலியன் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்