- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்தும் நடிகர் விஷால் சொன்னதை யாரும் கண்டுக்கலையே…? - சினிமா அமைப்புகள்...

நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்தும் நடிகர் விஷால் சொன்னதை யாரும் கண்டுக்கலையே…? – சினிமா அமைப்புகள் இப்படி பண்ணலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியான முதல் நாளில் முதல் காட்சியிலேயே அந்த படம் குறித்த விமர்சனங்கள் வெளியாகி விடுகின்றன. இதில் 90 சதவீதம் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி விடுகின்றனர். அந்த விமர்சனம்தான் இணையத்தில் வைரலாகி, அந்த படத்தையே காலி செய்து விடுகிறது.

சமீபத்தில் வெளியான இந்தியன் 2 கங்குவா தக்லைஃப் விடாமுயற்சி கேம் சேஞ்சர் குபேரா போன்ற பல படங்கள் இதுபோன்ற நெகட்டிவ் விமர்சனங்களால் மிக மோசமான தோல்வியை சந்தித்தன. இதனால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் இயக்குனர்களும் பலத்த அப்செட் ஆகினர்.

- Advertisement -

இதையடுத்து நடப்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புதிய படங்கள் குறித்து விமர்சிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் திரைப்படம் பார்த்தவர்கள் அதுபற்றி கருத்து சொல்வது விமர்சனம் செய்வதை எல்லாம் தடை விதித்து தடுத்து நிறுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறி அதை மறுத்துவிட்டது.

இந்த சூழலில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு பட விழாவில் பேசிய நடிகர் விஷால், இனிமேல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டர் வளாகங்களுக்குள் அந்த படங்கள் குறித்து விமர்சிக்க யாரையும் அனுமதிக்காதீர்கள். 3 நாட்கள் மட்டும் இப்படி செய்தால் அந்த படம் ஓரளவுக்கு ஓடிவிடும்.

- Advertisement -

தயாரிப்பாளர் சங்கம் வினியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, தியேட்டர் வாசல்களில் இதுபோன்ற பப்ளிக் ரிவ்யூ இல்லாமல் 3 நாட்களுக்கு மட்டும் தடுத்தால் போதும். ஓரளவுக்கு அந்த படங்கள் ஓடிவிடும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் நடிகர் விஷால் இப்படி தெரிவித்து இருந்தார்.

ஆனால் சின்ன படங்கள் எல்லாம் ரிவ்யூ போட்டால்தான், ரசிகர்கள் மத்தியில் சென்று சேருகிறது. ரிவ்யூ 3 நாட்களுக்கு இல்லாவிட்டால் அந்த படம் தியேட்டர்களுக்கு வந்ததே ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்றும் தியேட்டர் உரிமையாளர்களும் சினிமா தயாரிப்பாளர்களும் அதை கண்டுக்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர். விஷால் கோரிக்கையை தொடர்ந்து வெளியான பல படங்களுக்கு தியேட்டர் வாசல்களில் ரிவ்யூ நடந்து வருவதால், விஷாலை இப்படி இன்சல்ட் பண்ணிட்டாங்களே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்