- Advertisement -
Homeபொழுதுபோக்குவெறும் 3 நாட்களில் இத்தனை கோடி ரூபாயை அள்ளியதா குட் பேட் அக்லி திரைப்படம்... மாஸ்...

வெறும் 3 நாட்களில் இத்தனை கோடி ரூபாயை அள்ளியதா குட் பேட் அக்லி திரைப்படம்… மாஸ் காட்டிய ஏகே ரசிகர்கள்… திருவிழா கோலத்தில் திரையரங்குகள்…

- Advertisement -

அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், தற்போது கொண்டாட்ட களமாக மாறி இருக்கிறது. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாயாக அவர் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்கள். இதற்கு முக்கிய காரணம் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மாஸாக இருப்பதுதான்.

ஆரம்பித்தது முதல் இறுதி காட்சி வரை அஜித்தை மாஸாக காட்டி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்காக அவர் எந்த ஒரு காட்சியிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. இஷ்டத்திற்கு காட்சிகளை எடுத்து அதை ரசிக்கும்படி செய்தது தான் இங்கு வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக அஜித்தின் ஓப்பனிங் காட்சி, விஜயின் ஐ அம் வெயிட்டிங் என்ற டயலாக்கை கூறும் இடைவெளி காட்சி, கிளைமாக்ஸ் என அனைத்தையும் சிறப்பாக அமைத்திருக்கிறார் ஆதிக். அஜித்திற்கு அடுத்தபடியாக அர்ஜுன் தாசுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதில் ஜானி ஜாமி என்று இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறார் அர்ஜுன் தாஸ்.

படத்தின் கொண்டாட்டத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் ரெட்ரோ பாடல்கள் தான். கணக்கிலேயே இல்லாத அளவிற்கு அத்தனை ரெட்ரோ பாடல்களையும் உள்ளே புகுத்தி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். குறிப்பாக பிரியா வாரியர் மற்றும் அர்ஜுன் தாஸ் நடனம் ஆடும் சுல்தானா பாடலுக்கு ரசிகர்கள் விசில் பறக்கச் செய்தனர்.

- Advertisement -

படத்தில் கேமியோ ரோலில் வந்திருந்த சிம்ரன் உடனும் வாலி பட பாடல் ஒலித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படி கொண்டாட்ட தருணங்கள் நிறைய இருப்பதால் அஜித் ரசிகர்களை தாண்டி பலரும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு குவிந்து வருகின்றனர்.

முதல் நாள் மட்டும் இந்த திரைப்படம் முப்பது கோடியே 9 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியான மூன்று நாட்களில், 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், 200 கோடி ரூபாய் படம் வசூல் செய்யும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்