- Advertisement -
Homeபொழுதுபோக்குராயன் படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர் - அட… தனுஷ் கொடுத்த சூப்பர்...

ராயன் படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த நடிகர் – அட… தனுஷ் கொடுத்த சூப்பர் சான்ஸை இப்படி மிஸ் பண்ணிட்டாரே?

- Advertisement -

நடிகர் தனுஷ் எழுதிய இயக்கிய படம் ராயன். இது தனுஷ் நடிப்பில் வெளியான 50வது படம். வழக்கமாக 25, 50, 75, 100 வது படங்கள் என்பது நடிகர்களின் திரை பயணத்தில் முக்கிய மைல்கல்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என பல நடிகர்கள் 50வது படங்களில் வெற்றிக் கனி பறிக்க முடியவில்லை.

நல்லவன் வாழ்வான் படம் எம்ஜிஆருக்கும், சாரங்கதாரா படம் சிவாஜி கணேசனுக்கும். டைகர் என்ற தெலுங்கு படம் ரஜினிக்கும், மோகம் 30 நாள் என்ற படம் கமலுக்கும் 50வது படங்களாக அமைந்தன. இந்த படங்கள் எல்லாமே, ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே போல் விஜய்க்கு சுறா 50வது படமாக தோல்வியை தந்தது. அதே போல் ரஜினிக்கு 100வது படம் ஸ்ரீ ராகவேந்திரர், கமலுக்கு 100வது படம் ராஜபார்வையும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் 50வது பட வரிசையில் வெற்றியை பெற்ற நடிகர்கள் அஜீத்குமார், விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகிய 3 பேர் மட்டும்தான். மற்ற முன்னணி நடிகர்கள் இன்னும் 50வது படத்தை நெருங்கவில்லை. அஜீத்குமாருக்கு வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா பெரிய வெற்றியை தந்தது. அதேபோல் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படம், விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.

அதே வரிசையில், தனுஷின் 50வது படம் ராயன், 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி வேகமாக சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி நடித்திருக்கிறார் என்பதும் இதில் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. படம் முழுக்க வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும், படத்தின் கதையே கேங்ஸ்டர் கதை தான் என்பதால், ரசிகர்கள் ராயன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

ராயன் படத்தில் காத்தவராயன் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் தனுஷூக்கு 2 தம்பிகள். அதில் ஒருவர் சந்தீப் கிஷன், மற்றவர் காளிதாஸ் ஜெயராம். இவர்களுக்கு துஷாரா விஜயன் என்ற தங்கையும் இருக்கிறார். சந்தீப் கிஷன் ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ள கடைசியில், தனுஷ் ஆயுதம் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யாவுடன் சேர்ந்துக்கொண்டு தனுஷின் தம்பிகளே, தனுஷை கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.

இறுதியில் தம்பிகளிடம் இருந்து தப்பித்தாரா தனுஷ், கடைசியில் தனுஷை என் கவுண்டர் செய்ய திட்டமிடும் போலீஸ் அதிகாரி பிரகாஷ் ராஜிடம் இருந்து தப்பித்தாரா தனுஷ் போன்ற விறுவிறுப்பான சம்பவங்களுடன் இந்த படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் நடிகர் தனுஷின் தம்பியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார். முதலில் சந்தீப் கிஷன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஷ்ணு விஷாலிடம்தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்