தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பலே பாண்டியா மாவீரன் கிட்டு குள்ளநரிக் கூட்டம் நீர்ப்பறவை முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை ராட்சசன் துரோகி சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இப்போது விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் ஓஹோ எந்தன் பேபி என்ற படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடித்த இரண்டு வானம் என்ற படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் விக்ராந்த் தம்பி ராமையா தன்யா பாலகிருஷ்ணன் நிரோஷாஉள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் லால் சலாம். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்திருந்தார்.
லால் சலாம் படம் வெளியாகி பலத்த தோல்வியை சந்தித்தது. ரஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி மதம் குறித்த அரசியலை பேசியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. இடையே ஹார்டு டிஸ்க் தொலைந்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதும் பெரிய சர்ச்சயைை கிளப்பியது.
லால் சலாம் படம் பல மாதங்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அப்போதும் படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு விஷால், லால் சலாம் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே அந்த படத்தில் நடித்த ரஜினிகாந்த் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, லால் சலாம் படத்தில் நான் தான் மெயின் ஹீரோவாக இருந்தேன். ஆனால் சூப்பர் ஸ்டார் உள்ளே வந்ததற்கு பிறகு கதைக்களம் மாற்றப்பட்டது. இதனால் முழு போக்கஸ் அவர் பக்கம் திரும்பியதால் பிளாக்பஸ்டர் ஹிட் மிஸ் ஆனது. இதுவே அந்த படத்தின் தோல்விக்கு காரணம் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். அதாவது ரஜினிக்காக கதை மாற்றப்பட்டதே தோல்விக்கு காரணம் என்று விஷ்ணு விஷால் கூறியிருப்பது ரஜினி ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.





