- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி, சட்டென டென்சன் ஆன நடிகர் யோகிபாபு - இப்படி...

இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி, சட்டென டென்சன் ஆன நடிகர் யோகிபாபு – இப்படி கேட்டா, கோபம் வரத்தானே செய்யும்?

- Advertisement -

நடிகர் யோகி பாபு ஆரம்பத்தில் சில படங்களில் சில காட்சிகளில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. காக்கா முட்டை படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லே நீ, என்று நடிகர் ரமேஷ் திலக்கிடம் கேட்பார். அந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதன்பிறகு சுந்தர் சி தனது படங்களில் யோகிபாபுவுக்கு வாய்ப்பளித்தார். ஏனெனில் அவரது படங்களில் வடிவேலு நடிக்க மறுத்த நிலையில் சந்தானம், சூரி போன்றவர்களும் ஹீரோ ஆன நிலையில் சுந்தர் சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களும் யோகிபாபுவுக்கு வாய்ப்பு அளித்தனர்.

அதிலும் கோலமாவு கோகிலா டாக்டர் ஜெயிலர் சர்தார் சர்கார் மான் கராத்தே மாவீரன் போன்ற பல படங்களில் யோகிபாபு கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. அதன்மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்ற யோகிபாபு, மண்டேலா கூர்கா எமதர்ம ராஜா படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

ஆன்மிக நாட்டம் அதிகமுள்ள நடிகர் யோகிபாபு அடிக்கடி திருப்பதி திருச்செந்தூர் திருத்தணி பழனி உள்ளிட்ட கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். தனது கழுத்தில் சாமி டாலர்களை அணிந்துள்ள அவர், கைகளிலும் பல நிறங்களில் சாமி கயிறுகளை கட்டியிருக்கிறார்.

கோவில்களுக்கு சென்றால் அங்கு சாமி முன்பு பூஜிக்கப்பட்ட கயிறுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். பக்தர்களும் அதை கைகளில் பக்தியாக கட்டிக் கொள்கின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்கள் கையில் பல கயிறுகளை கட்டி இருக்கிறீர்களே, இதற்கு என்ன காரணம் என்று அங்கிருந்த மீடியா தரப்பில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் யோகி பாபு, இதெல்லாம் சாமி விஷயம். நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய விஷயம். அதனால் இதைப் பற்றி இதற்கு மேல் யாரும் பேச வேண்டாம். அது மட்டுமின்றி இந்த இடத்தில் இது தேவையில்லாத கேள்வி என்று சட்டென்று டென்ஷனாகி பதில் சொன்னார். அவர் கோபம் நியாயம்தானே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்