ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு ஒரு கட்டத்தில் காமெடி நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தொடர்ந்து மண்டேலா போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து அசத்தினார். ஹீரோ காமெடியன் என யோகிபாபு மாறி மாறி தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
காமெடியன்களாக நடித்து வந்த வடிவேலு விவேக் சந்தானம் சூரி சதீஷ் போன்றவர்கள் எல்லாம் ஹீரோக்களாக மாறிய நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் காமெடியன்கள் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இப்போதைக்கு யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி போன்றவர்களை வைத்துதான் காமெடி காட்சிகளை இயக்குனர்கள் ஒப்பேத்தி வருகின்றனர்.
நடிகர் வடிவேலு காமெடி முன்பை போல ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஆதரவை பெறவில்லை. அவர் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த கேங்கர்ஸ் படம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. வடிவேலு கேங்கர்ஸ் படத்தில் கம்பேக் தருவார் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் அக்யூஸ்ட் என்ற படத்தில் முதன்முறையாக நடிகர் உதயா அஜ்மல் மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். கன்னட சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய பிரபு சீனிவாஸ் அக்யூஸ்ட் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த அக்யூஸ்ட் பட விழாவில் பேசிய நடிகர் உதயா கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருநெல்வேலி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானேன். அந்த படம் கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்தது. பின்னர் சினிமாவில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு போய்விடலாம் என்று கூட யோசித்து இருக்கிறேன். ஆனால் தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அக்யூஸ்ட் படத்தில் நடித்திருக்கிறேன் என்று பேசினார்.
இந்த விழாவுக்கு நடிகர் யோகி பாபு நேரில் வரவில்லை. ஆனால் வீடியோ காலில் அவர் பேசினார். எனக்கு இரவு படப்பிடிப்பு என்பதால் இந்த விழாவுக்கு என்னால் வர முடியவில்லை. படம் நன்றாக வந்துள்ளது என்று அதில் கூறியிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ஒரு பட விழாவுக்கு அவர் வரவில்லை என்று புகார் எழுந்த நிலையில், இப்போது நடிகர் யோகி பாபு வீடியோ காலில் பேசியிருக்கிறார். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் உதயா, நடிகர் விஜய் நடித்த தலைவா படத்திலும் நடித்திருக்கிறார். தலைவா படத்தின் இயக்குனர் ஏஎல் விஜயின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது





