தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. சந்தானம் சூரி என காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க போய் விட்டதால் தமிழில் காமெடி நடிப்புக்கு கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. அதனால் இப்போது இயக்குனர்களின் ஒரே தேர்வாக இருப்பவர் யோகிபாபு தான் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் நடிகர் யோகிபாபு குறித்து ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை அவர் தனது 21 மேனேஜர்களை மாற்றியிருக்கிறார். அதே போல் அவரிடம் பிஆர்ஓ க்களாக பணிசெய்த 7 பேர் வரை இதுவரை மாறிச் சென்றுள்ளனர். அதாவது யாருமே அவரிடம் நிலையாக பணியில் இருந்தது இல்லை.
இதற்கு முக்கிய காரணம் நடிகர் யோகிபாபு யாருக்குமே சம்பளத்தை சரியாக தராமல் மாதக்கணக்கில் பாக்கி வைத்து விடுவது வழக்கமாக உள்ளது. அதாவது தங்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதம் அல்லது மாதந்தோறும் இவ்வளவு சம்பளம் என தீர்மானித்து அந்த அடிப்படையில் தான் மேனேஜர் பிஆர்ஓ க்கள் பணி செய்கின்றனர்.
அதனால் தனக்கு மாதக்கணக்கில் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் யோகிபாபுவின் செயலால் மனம் வெறுத்துப் போய் விரக்தியடைந்த பல மேனேஜர்கள் அவரிடம் பணிசெய்யாமல் வெளியேறி போய் உள்ளனர். அதாவது ஒரு மேனேஜருக்கு 6.5 லட்சம் ரூபாய் வரை பாக்கி வைத்து வெறுப்பேற்றி இருக்கிறார் யோகிபாபு.
அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அந்த மேனேஜர் பணியில் இருந்து விலகி போயிருக்கிறார். இப்படி பல மாதங்களுக்கு சம்பளம் தராமல் அவர்களை வெறுப்படைய செய்வதில் யோகிபாபு கில்லாடியாக உள்ளார். ஒருவேளை அவர்கள் யோகிபாபுவிடம் சம்பளம் பாக்கி உள்ளது என்று சொல்லி விட்டால் உடனே அவரை மாற்றிவிட்டு வேறு மேனேஜரை நியமித்து கொள்வது அவரது வழக்கமாக உள்ளது.
இப்படி ஒரு முன்னணி காமெடி நடிகர் சம்பள பாக்கி தராமல் மேனேஜர்களை பிஆர்ஓ க்களை ஏமாற்றுவதும் அவர்களை அலைக்கழிப்பதும் வேலையை விட்டு விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. எப்போது யோகிபாபு போன்றவர்கள் திருந்துவார்கள் என்று ரசிகர்கள் அதிருப்தியாக கேள்வி எழுப்புகின்றனர்.





