- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் விஜய்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ரெடி ஆகும் “தளபதி...

இதுவரை இல்லாத புதிய கெட்டப்பில் விஜய்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ரெடி ஆகும் “தளபதி 68” படக்குழு…

- Advertisement -

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் “தளபதி 68” திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எப்போது “தளபதி 68” திரைப்படத்தின் பேச்சுக்கள் தொடங்கியதோ அப்போதில் இருந்து இத்திரைப்படத்தை குறித்தான அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு “தளபதி 68” திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அதே போல் இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவும் உள்ளார். வெகு காலம் கழித்து யுவன் ஷங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதால் ரசிகர்களுக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை.

- Advertisement -

“தளபதி 68” திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான பூஜை வருகிற ஜூன் 22 ஆம் தேதி போடப்பட்டவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் “தளபதி 68” குறித்தான ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது “தளபதி 68” திரைப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கவுள்ளாராம். அதுவும் இதுவரை விஜய் ஏற்று நடித்திராத மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.

- Advertisement -

விஜய் தற்போது நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட  படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

“லியோ” திரைப்படத்திலும் விஜய் இரண்டு கெட்டப்களில் வருகிறார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்திலும் இரண்டு கெட்டப்களில் விஜய் நடிக்கவுள்ளார் என்று வெளிவரும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்