- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் யோகிபாபுவுக்கே விபூதி அடிச்சிட்டாங்களே? கெணத்த காணோம் பட விழாவில் பேசியதற்கு பதிலடி - ...

கடைசியில் யோகிபாபுவுக்கே விபூதி அடிச்சிட்டாங்களே? கெணத்த காணோம் பட விழாவில் பேசியதற்கு பதிலடி – பிரபலம் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. காமெடி நடிகராக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் அவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அதிகளவில் நடிக்கிறார். கடைசியாக கெணத்த காணோம் என்ற படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் பிரபலமான லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் யோகிபாபு. கடந்த 2009ம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தில் ஒரு சிறிய வேடம் அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு லொள்ளு சபா பாபு, யோகி பாபுவாக மாறினார். தொடர்ந்து பட்டத்து யானை சூதுகவ்வும் வீரம் மான் கராத்தே காக்கா முட்டை போன்ற பல படங்களில் யோகிபாபு காமெடி ரோலில் நடித்தார்.

- Advertisement -

காமெடி நடிகர்கள் வடிவேலு சந்தானம் விவேக் போன்றவர்கள் காமெடியை விட்டுவிட்டு ஹீரோவாக ஆர்வம் காட்டிய நிலையில், அப்போது தமிழ் சினிமாவில் ஏற்பட்ட காமெடி நடிப்புக்கான வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட யோகிபாபு காமெடி நடிகராக வேகமாக வளர்ந்தார். அவரது அபரிமிதமான வளர்ச்சிக்கு அவரது ஹேர்ஸ்டைல் உடல் தோற்றமும் நடிப்பும் கை கொடுத்தது.

வந்த வாய்ப்புகளை எல்லாம் யோகிபாபு சரியாக பயன்படுத்திக் கொண்டார். கோலமாவு கோகிலா மண்டேலா ஜெயிலர் மாவீரன் குட்பேட் அக்லி டூரிஸ்ட் ஃபேமிலி தலைவன் தலைவி இப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து யோகி பாபு முன்னணி நட்சத்திர காமெடி நடிகராக மாறினார். ஹீரோவாக அதாவது கதையின் நாயகனாக சில படங்களில் நடித்த போதிலும், அந்தப் பாதையில் இருந்து மாறி அடிக்கடி காமெடி ரோலிலும் யோகி பாபு நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான கெணத்த காணோம் படத்தின் விழாவில் யோகி பாபு பேசும்போது, இந்த படத்தின் இயக்குனர் எனது தம்பி சுரேஷ் சங்கய்யா இப்போது உயிருடன் இல்லை. இயக்குனர் இல்லாமல் ஒரு படத்தை வெளியிடுவது மிகப்பெரிய சிரமம். அந்த வகையில் தயாரிப்பாளர் பல சிரமங்களுடன் இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மக்களுடைய பிரச்னைகளை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த கதையாக இருந்தாலும் எடுத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள். நான் செய்கிறேன் என்று பேசியிருந்தார். இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தனது எக்ஸ் பக்கத்தில், உலக மகா நடிப்புடா சாமி என அவரை கிண்டல் செய்திருக்கிறார். காக்கா முட்டை படத்தில் எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லை நீ என்று யோகிபாபு பேசிய டயலாக்கை இன்று பிஸ்மி உண்மையாக்கி விட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்