- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படம் எப்படி இருக்கும், விஜய் நடிப்பு குறித்து காமெடி நடிகர் யோகி பாபு கொடுத்த...

கோட் படம் எப்படி இருக்கும், விஜய் நடிப்பு குறித்து காமெடி நடிகர் யோகி பாபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் – ஆனால் ரசிகர்கள் இதை பண்ணனுமாம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படம் சுருக்கமான கோட் என அழைக்கப்படுகிறது, மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். வசீகரா படத்துக்கு பிறகு, சினேகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அப்பா மகன் என்ற 2 வேடங்களில் விஜய் நடித்துள்ள நிலையில், மகன் கேரக்டருக்கு மீனாட்சி சௌத்ரி ஜோடியாக நடித்துள்ளார். இதுதவிர 3வது கேரக்டரிலும் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுவதால், இந்த படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்திருப்பது உறுதியாகி விட்டது. ஆனால், படக்குழு அதை இன்னும் ரகசியமாக வைத்திருக்கிறது.

- Advertisement -

இதற்குமுன் கடந்தாண்டில் அக்டோபர் 19ல் வெளிவந்த லியோ படம், விஜய் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தது. லோகேஷ் கனகராஜ், எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்தை ரசிகர்களுக்கு தரவில்லை. கைதி, விக்ரம் அளவில் எதிர்பார்த்த இந்த படத்தில் இரட்டை பிறவி, நரபலி போன்ற விஷயங்களை கொண்டு வந்து, சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

அதனால் வெங்கட்பிரபு, கோட் படத்தை வேற லெவலில் தரமாக கொடுத்திருப்பார் என்ற பயங்கரமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். டைம் டிராவல் அடிப்படையில் அறிவியல்பூர்வமான இந்த படத்தில், தொழில்நுட்ப விஷயங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் வெங்கட்பிரபு, நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது.

- Advertisement -

கோட் படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ், யோகி பாபு போன்ற காமெடி நட்சத்திர நடிகர்களும் நடித்துள்ளதால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சர்கார் படத்தில் ஏற்கனவே விஜயுடன் யோகிபாபு செய்திருந்த அலப்பரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் கோட் படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜய் அண்ணா எப்போதுமே மாஸ்தான். கோட் படம் நீங்க நெனைக்கறதை விட ரொம்ப சூப்பராக வந்திருக்கிறது. நிச்சயமா, வேற லெவல்ல கோட் படம் இருக்கும். ரசிகர்கள் தியேட்டர்ல போய் படம் பாருங்க, கண்டிப்பா ரொம்பவும் என்ஜாய் பண்ணுவீங்க, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்