- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த எங்களுக்கும் ஆசைதான், ஆனால் முடியவில்லை - உண்மையை போட்டுடைத்த...

நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த எங்களுக்கும் ஆசைதான், ஆனால் முடியவில்லை – உண்மையை போட்டுடைத்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் முன்னணி நடிகர்கள் இளம் ஹீரோயின்கள் காமெடி நடிகர்கள் என யாரும் பங்கேற்கவில்லை. 2800 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 700 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷாலும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

புருஷன் படப்பிடிப்பில் அவருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சங்கத் தலைவர் நாசர் கூறினார். மேலும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் கார்த்தி கருணாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்னிந்திய நடிகர் சங்க புது கட்டட பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது.

- Advertisement -

இன்னும் 45 நாட்கள் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. பின்னர் ஒரு மாதம் வரை செய்த பணிகளை செக் செய்வார்கள். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புது கட்டடத்தை திறக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறை சங்க கட்டிடம் திறக்காததால் விஷால் தலை தீபாவளி கொண்டாட முடியாது. ஆனால் தலைப் பொங்கல் கொண்டாடுவார். அதற்குள் சங்க கட்டிடம் திறக்கப்பட்டு விடும்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள். அதே சமயம் சங்க கலை நிகழ்ச்சி என்றால் அனைத்து முன்னணி நடிகர்களும் வருகிறார்கள். அவர்கள் அப்படி கொடுத்த ஒத்துழைப்பால் தான் கலை நிகழ்ச்சி நடத்தினோம். கடன்களை அடைத்தோம்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சங்க நிர்வாகிகள், எங்களுக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால் அவர் பாராட்டு விழாவிற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றனர். நடிகர் சங்க பொதுக்கட்டத்திற்கு ஆன மொத்த செலவை விரைவில் சொல்வோம் என்று நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறினார்.

மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து யூடியூப்பில் தவறாக பேசிய 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடரும். பாதிக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும். சில சமயம் சங்க உறுப்பினர்களே சக உறுப்பினர்களை இப்படி அவதூறாக பேசுவதும் தவறு என்றனர். இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

சற்று முன்