- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமலை தொடர்ந்து நடிகர்கள் சிம்பு தனுஷ் அடுத்து இணைந்து நடிக்கப் போகிறார்களா? - வெளியான...

ரஜினி கமலை தொடர்ந்து நடிகர்கள் சிம்பு தனுஷ் அடுத்து இணைந்து நடிக்கப் போகிறார்களா? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிப்பில் சிகரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கடந்த 1975 – 80களில் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்த நிலையில் ஒரு கட்டத்துக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர். கடந்த 46 ஆண்டுகளில் ரஜினி கமல் இருவரும் தனித்தனியாக பயணித்து சிகரங்களாக நடிப்பில் உயர்ந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் தற்போது ரஜினி கமல் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் அவர்கள் இருவரும் நடிப்பது உறுதியாகி விட்டது. லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர் என கமல் தரப்பு முடிவு செய்த நிலையில் ரஜினிக்கு அதில் திருப்தியில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் நடிகர் கமல்ஹாசன் நல்ல ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள். ரஜினியிடம் நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜிடம் கூறிய நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிப்பது உறுதியாகி விட்டது. இதே போல் தற்போது ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக சிம்பு தனுஷ் இருவரும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் நேற்று இட்லி கடை படத்தின் பிரமோ நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய படத்தின் இயக்குனர் மற்றும் நாயகன் தனுஷ் கூறுகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 படம் அடுத்த ஆண்டு 2026ல் படப்பிடிப்பு துவங்கும். 2027ம் ஆண்டில் படம் ரிலீஸாகும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

வடசென்னை 2 படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தானே தயாரிப்பதாகவும் அதில் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார் என்றும் சென்னையில் நடந்த இட்லி கடை விழாவில் பகிரங்கமாக அறிவித்தார். மேலும் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு வடசென்னை படத்தின் கிளை கதையில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் 2026ம் ஆண்டில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில் தனுஷ் நடிக்கும் வடசென்னை 2 படத்தில் நடிகர் சிம்புவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி கமல் இணைந்து நடிக்கின்றனர். விக்ரம் 2 படத்தில் கமல் சூர்யா இணைந்து நடிக்க உள்ளனர். இதற்கிடையே தனுஷ் சிம்புவும் இணைந்து வடசென்னை 2 படத்தில் நடிக்க உள்ளனர். இனி தமிழ் ஹீரோக்கள் இரட்டை நாயகர்களாக நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்