தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக வாழ்க்கையை துவங்கி, ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோவாக மாறிவிட்டால், அவர்களின் இமேஜூம், வருமானமும் பன்மடங்கு உயர்ந்து விடுகிறது. அப்படி மார்க்கெட் இமேஜ் உள்ள நடிகர்கள் தங்களது தயாரிப்பு படத்தில் ஹீரோவாக நடிக்கும்போது, அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது தயாரிப்பாளரின் கடமை என்பதை மறுக்க முடியாது.
அதனால், தயாரிப்பாளர் என்பவர் அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார் என்பதற்காக, அவரை சிரமப்படுத்தி விடக்கூடாது. ஆனால் இங்கு ஒரு இயக்குநரும், ஹீரோவும் செய்த நாகரிகம் அற்ற செயல்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவர்களது போதைக்கு, தயாரிப்பாளரை ஊறுகாய் ஆக்கிய கொடுமை நடந்துள்ளது. இது தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
போக்கிரி ரமேஷ் என்பவர் தயாரிப்பாளர். அவரது படத்தில் ஒரு பிரபல நடிகர் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய இயக்குநரை, அந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு, டெல்லியை அடுத்துள்ள பனிப்பொழிவு பிரதேசமான லடாக்கில் நடந்து இருக்கிறது. இதற்காக படக்குழு லடாக்கில் சென்று முகாமிட்டு, ஷூட்டிங் நடத்தப்பட்டு இருக்கிறது.
வழக்கமாகவே தினமும் சரக்கு அடிக்கும் அந்த பிரபல நடிகரும், இயக்குநரும் தங்களுக்கு லடாக்கில் கிடைக்கும் சரக்கு வகைகளின் டேஸ்ட் பிடிக்கவில்லை. எனவே, சென்னையில் இருந்து தங்களுக்கு பிடித்தமான பிராண்டட் சரக்குகளை வாங்கி அனுப்புங்கள் என, தயாரிப்பாளரிடம் கூறியுள்ளனர். அதே போல், பெட்டிகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட பிராண்டட் சரக்கு வகைகள் அடுக்கப்பட்டு, டெல்லி வரை விமானத்திலும், அங்கிருந்து ஹெலிகாப்டரிலும் லடாக் சென்று சேர்ந்திருக்கிறது. அதுவும் தயாரிப்பாளரின் சொந்த செலவில்தான்.
ஆனால், இந்த படம் பிறகு எடுக்கப்படாமல் பாதியிலேயே நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மாதிரி, தயாரிப்பாளர் பணத்தை தண்ணியாக செலவழித்த நடிகர் மற்றும் இயக்குநர் இவர்களா என நினைக்கும்போது ஆச்சரியமாக, ஏன் அதிர்ச்சியாக கூட இருக்கிறது. தயாரிப்பாளரை இப்படி எல்லாம் சிரமப்படுத்த, நெருக்கடி கொடுக்க இவர்களால் முடிகிறது என்றால், ரசிகர்களின் மீதான இவர்களது சிந்தனையும் அலட்சியமானதாகவே இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, பலராலும் சிறந்த நடிகராக பாராட்டப்பட்ட சியான் விக்ரம், சமீபத்தில் நல்ல படங்களில் நடித்து வரும் நடிகரும், இயக்குநருமான செல்வராகவன் ஆகிய இருவரும்தான், இப்படி சென்னையில் இருந்து, படப்பிடிப்பு தளமான லடாக் வரை, சரக்குகளை வரவழைத்து பயன்படுத்தியவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. பெரிய நட்சத்திரங்களே இப்படி நிலை தடுமாறி நடந்துக்கொள்ளும்போது, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களும் இப்படித்தானே இருப்பார்கள் என்கின்றனர் ரசிகர்கள்.





