- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்கே 25 படத்தில் யாருக்கும் சம்பளம் கிடையாதா? அந்த பார்மூலாவை கொண்டு வந்துட்டாங்களா? - என்னய்யா...

எஸ்கே 25 படத்தில் யாருக்கும் சம்பளம் கிடையாதா? அந்த பார்மூலாவை கொண்டு வந்துட்டாங்களா? – என்னய்யா இது என ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 5 கோடி ரூபாய், 10 கோடி ரூபாய் என குறைந்த பட்ஜெட்டில் படங்கள் உருவாகின்றன. அதே போல் 200 கோடி முதல், 400 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட் படங்களும் உருவாகின்றன. கடந்த சில ஆண்டுகளாக ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்ற பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்களில்தான் மட்டும்தான் நடிக்கின்றனர். சில படங்கள் கணிசமான லாபத்தை அள்ளிக் கொட்டுகின்றன.

அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் எஸ்கே 24 படத்திலும், சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்திலும் நடிக்க கமிட் ஆனார். ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் எஸ்கே 23 படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே ஏஆர் முருகதாஸ், இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருவதால், 4 மாதங்களுக்கு பிறகுதான் எஸ்கே 23 ஷூட்டிங்கை தொடர இருக்கிறார். அதுவரை சிவகார்த்திகேயனுக்கு பிரேக் விட்டுள்ளார். அதே போல் எஸ்கே 24 படத்தையும் 4 மாதங்களுக்கு பிறகே துவங்க, இயக்குனர் சிபி சக்ரவர்த்தியும் கூறிவிட்டார்.

அதனால் இப்போது சுதா கொங்கரா இயக்கும் எஸ்கே 25 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் தற்போது துவங்கி விட்டது, இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தை பர்ஸ்ட் காபி முறையில், இயக்குனர் சுதா கொங்கராவே சொந்தமாக தயாரிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக அட்வான்ஸ் ரூ. 10 கோடி தரப்பட்டுள்ளது. வில்லனாக நடிக்கும் நடிகர் ஜெயம் ரவிக்கு ரூ. 5 கோடி அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. மற்றபடி சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோர் ரெவின்யூ ஷேர் அடிப்படையில் இந்த படத்துக்கான சம்பளத்தை பெற ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த பார்மூலா தெலுங்கு சினிமாவில்தான் நடைமுறையில் உள்ளது. படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் தங்களுக்கு என குறிப்பிட்ட தொகையை சம்பளத்தை வாங்காமல், படம் ரிலீஸான பிறகு கிடைக்கும் மொத்த லாபத்தில் தங்களது பங்கை பிரித்துக்கொள்ளும் முறை உள்ளது. இப்போது எஸ்கே 25 படத்திலும் அந்த பார்மூலாவை கொண்டு வந்துள்ளனர். இதையறிந்த ரசிகர்கள், ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்