- Advertisement -
Homeபொழுதுபோக்குமூணு மணி, மூன்றரை மணி நேரத்துக்கு மேல் படமா?; இயக்குனர் பாலா சொன்ன சூப்பர் டிப்ஸ்...

மூணு மணி, மூன்றரை மணி நேரத்துக்கு மேல் படமா?; இயக்குனர் பாலா சொன்ன சூப்பர் டிப்ஸ் – இதை பாலோ அப் பண்ணுங்கப்பா ப்ளீஸ்!

- Advertisement -

இப்போதெல்லாம் சினிமா தியேட்டருக்கு செல்லவே யோசிக்க காரணம், நேரம். ஒரு படம் என்பது 2 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் 15 நிமிடம் என்பதுதான் சரியானதாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பல படங்கள் 2 மணி நேரம் 45 நிமிடம், 3 மணி நேரம் 3 மணி நேரம் 30 நிமிடம் என படத்தின் நீளம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்படி 3 மணி நேரத்துக்கு மேல் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப ரசிகர்கள் செல்ல வேண்டியுள்ளது. குடும்பத்துடன் செல்பவர்கள் இரவு காட்சிகளுக்கு செல்ல முடியாது. தவிர தியேட்டர் நிர்வாகங்களும் இப்படி அதிக நேரம் படத்தை காட்சிப்படுத்துவது பல விதங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

தவிர அந்த படம் நன்றாக விறுவிறுப்பாக இருந்து விட்டால் அமர்ந்து பார்த்து விடலாம். அதுவே இந்தியன் 2 கங்குவா போன்ற படங்களாக இருந்துவிட்டால் ரசிகர்களின் நிலை என்ன என்பதே கேள்விக்குறி. குறிப்பாக வெற்றிமாறன் வெங்கட்பிரபு சேரன் சிறுத்தை சிவா போன்ற சில இயக்குனர்கள் 2 மணி நேரத்துக்குள் படம் எடுப்பதே இல்லை.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாலா கூறியதாவது, என் படத்தின் கதையை ஒவ்வொரு ஷாட் பை ஷாட்டாக எழுதுவேன். நான் எழுதியதை மட்டும்தான் காட்சிகளாக எடுப்பேன். எக்ஸ்ட்ராவாக எடுக்க மாட்டேன். என் படத்தில் மொத்தமாக 300 அடி முதல் 400 அடி வரை தான் ட்ரிம் ஆகும். மத்தபடி எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் படத்தில் வந்துவிடும்.

- Advertisement -

நான் பர்ஸ்ட் ஹாப் வரை எடுத்த காட்சிகளுக்கு புட்டேஜ் போட்டு விடுவேன். சீன் பை சீன் என அந்தந்த காட்சிகளை புட்டேஜ் செய்துவிடுவேன். அப்படி தான் நான் திரைக்கதையையே திட்டமிட்டு எழுதுவேன். இப்படி செய்யும்போது பேப்பரிலேயே எடிட்டிங் ஆயிடும். எடிட்டிங் ரூமில் போய் படத்தை குறைக்கிற வேலையை நான் செய்வது இல்லை. அப்படி பண்றது பணம் வேஸ்ட் ஆகும்.

நமக்கே இது மனசுக்கு கஷ்டமான விஷயம். நிறைய எடுத்துவிட்டு அதில் பாதி படத்தை தூக்கி வேண்டாம் என்று போடுவது வேதனையான விஷயம். நேரத்தை குறைக்க பல காட்சிகளை குறைப்பது, ரிலீஸ்க்கு பிறகு, ரிலீஸ்க்கு முந்தைய நாள் நேரத்தை குறைப்பது எல்லாம், அய்யோ இவ்வளவு எடுத்து வேஸ்ட்டா போச்சு, என்று நமக்கே அது மனசுக்கு கஷ்டமாக இருக்கும் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார். இந்த டிப்ஸை மற்ற இயக்குனர்களும் பாலோ அப் செய்தால் ரசிகர்கள் நிம்மதியடைவார்கள்.

- Advertisement -

சற்று முன்