சில நடிகர்கள் நடிகைகள் 35 40 45 வயதுகளை கடந்தும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர். சில நடிகர்கள் நடிகைகள் 50 வயதுகளை கடந்தும் திருமணமின்றி வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். பணம் புகழ் செல்வாக்கு என சகல வசதிகள் இருந்தும் திருமண வாழ்க்கையை சிலர் கட்டாயமாக தவிர்க்கின்றனர். கணவனாக மனைவியாக வாழ்வதை அவர்கள் வெறுக்கின்றனர்.
பிரபல மலையான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். நடிகர் விஷால் நடித்த ஆக்சன் படத்தில் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஜகமே தந்திரம் கட்டா குஸ்தி பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 மாமன் ஆகிய படங்களில் நடித்து ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும் ஐஸ்வர்ய லட்சுமி நடித்து வருகிறார். இப்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி 2 படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நடித்த ஆஷா படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஊர்வசி நடித்துள்ளனர். இந்த படத்தை ஜஃபர் சனல் டைரக்ட் செய்திருக்கிறார்.
34 வயதான ஐஸ்வர்யா லட்சுமி இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, என்னுடைய 34 ஆண்டு கால வாழ்க்கையில் பல திருமணங்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையாக மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் என்பது குறைவுதான்.
பலரது வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. இதனால் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. இளம் வயதில் திருமணம் குறித்து பல கனவுகள் கண்டேன். ஆனால் காலப்போக்கில் என் பார்வை மாறிவிட்டது. வாழ்க்கைக்கு திருமணம் அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். எனக்கு திருமணம் செய்யும் எண்ணமே சிறிது கூட இல்லை.
வாழ்க்கை துணை வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் திருமண வாழ்க்கையில் இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அதனால் திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது. எனது இந்த நிலைப்பாடு காதலுக்கு எதிரானது அல்ல. சமூக அமைப்பாக இருக்கும் திருமண முறையை தான் நான் ஏற்கவில்லை என்று ஐஸ்வர் லட்சுமி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.





