தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். தன்னம்பிக்கையான படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்த ஒரு சிறப்பான படைப்பாளி. வானத்தை போல சூரியவம்சம் புது வசந்தம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பிரியமான தோழில போன்ற இவரது படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவை.
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, கடந்த 1999ம் ஆண்டில் நான் வானத்தை போல படம் ஷூட்டிங்கை சாலக்குடியில் எடுத்துட்டு இருந்தேன். அப்புறம் ஜனவரி அந்த படத்தோட எடிட்டிட் ரீ ரிக்கார்டிங் வேலை எல்லாம் பரபரப்பா நடந்துட்டு இருக்கு. அப்போ எல்லோரும் புதுசா ரிலீஸான ஒரு படம் பத்தி பேசிட்டே இருக்காங்க. எனக்கு அந்த படம் பார்க்கணும்ன்னு ஆர்வமா இருக்கு. ஆனா எனக்கு டைம்மே கிடைக்கலே.
அப்புறம் ஜனவரி 10ம் தேதி காலையில் கொஞ்சம் ப்ரியா இருக்கேன். ஈவினிக் வானத்தை போல பர்ஸ்ட் காப்பி ரெடியாகும் என்கிற பொசிஷன். அதனால் அந்த படத்துக்கு போலாம் என்று தியேட்டருக்கு போயிட்டேன். பர்ஸ்ட் ஆஃப் வரைக்கும் படம் பார்த்துட்டு இருக்கேன். அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு. பர்ஸ்ட் ஆஃப் ஓகே தான்.
அப்புறம் செகண்ட் ஆஃப் பார்க்கறப்போ அப்படியே இன்வால்வ் ஆகி இன்வால்வ் ஆகி கடைசியில் கிளைமாக்ஸ் வர்றப்போ ஆடியன்ஸ் எல்லாம் ஒரு மாதிரி ஆகி தியேட்டர் முழுக்க ஒரு அதிர்வு ஏற்பட்டுடுச்சு. அப்புறம் படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வர்றோம். யாரும் யார்கிட்டயும் எதுவும் பேசலை.
ஆனா வழக்கமாக படம் பார்த்தவங்க நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் ஏதாவது கமெண்ட் பண்ணிட்டு பேசிட்டு வர்றதுதான் வழக்கம். நானும் அப்படியே சைலண்ட்டாக நடந்து வந்தேன். வழக்கமாக அப்படி நடந்து வரும்போது சிகரட் பிடிப்பேன். அதுவும் கூட பிடிக்கலே. வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடக் கூட தோணாமல் அப்படியே மாடியில் போய் உட்கார்ந்துட்டேன்.
அப்போ 3 மணிக்கு என் மனைவி வந்து, பொங்கலுக்கு பர்சேஸ் பண்ண பையனை கூட்டீட்டு போகணும். கார் எங்கே, காரை எங்கே அனுப்பினீங்க என்று கேட்கிறார். அப்பதான் எனக்கு கிளிக் ஆகுது, காரை தியேட்டர்ல விட்டுட்டு நான் நடந்தே வீட்டுக்கு வந்திருக்கேன். அப்புறம் தியேட்டருக்கு போன் பண்ணி சொல்லி டிரைவரை காரை எடுத்துட்டு வீட்டுக்கு வரச் சொன்னேன். அந்தளவுக்கு பாதிப்பை எனக்குள் ஏற்படுத்திய படம் பாலா டைரக்ட் செய்த சேது படம்தான் என்று இயக்குனர் விக்ரமன் கூறியிருக்கிறார்.





