நடிகர் யோகிபாபு பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து ஒரு கட்டத்துக்கு பிறகு காமெடி நடிகராக மாறியவர். துவக்கத்தில், பன்னி மூஞ்சி வாயன் என அவர் நடித்த படத்திலேயே, அவரை சக நடிகர்கள் விமர்சிக்கும் அளவுக்கு, நடித்தவர். அதே சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வெற்றி பெற்றிருப்பது அவரது திறமை, உழைப்பும்தான்.
நடிகர் யோகிபாபுவுக்கு நல்ல காமெடி அந்தஸ்தை கொடுத்த படம் காக்கா முட்டை. எனக்கே விபூதி அடிச்சே இல்லே நீ என்ற கடைசி காட்சியில் அவர் பேசிய டயலாக், டிரண்டிங் ஆனது. தொடர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் ஹீரோயின் நயன்தாராவையே ஒன் சைடாக காதலிப்பார். டாக்டர் படத்திலும் யோகி பாபு நடிப்பு அதிக கைதட்டலை பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தர்பார் படத்தில் நடித்தார். பிறகு, மண்டேலா படத்தில் கதையின் நாயகனாக, பார்பராக நடித்து அசத்தினார். யோகிபாபுவுக்குள் நல்ல நடிகர் இருப்பதை இந்த படம் வெளிப்படுத்தியது. தொடர்ந்து கூர்கா, பொம்மை உள்ளிட்ட படங்களிலும் அவரது நடிப்பு அதிக கவனம் பெற்றது.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன் யோகிபாபு குறித்த ஒரு விமர்சனம் எழுந்தது. அதாவது பல ஆண்டுகளாக அவருடன் இருந்த மேக்கப் மேன், அவரிடம் இருந்து விலகி சென்றுவிட்டார். அதற்கு காரணம், படத் தயாரிப்பாளர் அவருக்கு தினமும் ரூ. 18 ஆயிரம் சம்பளம் தந்த நிலையில், அதில் ரூ. 15 ஆயிரத்தை யோகிபாபு எடுத்துக்கொண்டு, ரூ. 3 ஆயிரத்தை மட்டுமே மேக்கப் மேனுக்கு சம்பளமாக தந்து ஏமாற்றியிருக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததால், விரக்தியடைந்த மேக்கப் மேன் அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.
இப்போது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது யோகிபாபு பயன்பாட்டுக்காக கேரவன் வேன், படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஒரு கேரவன் வேன்தான் வேண்டும் என தயாரிப்பாளரிடம் அடம் பிடிக்கிறார். அந்த கேரவனின் வாடகை ரூ. 10 ஆயிரம். ஆனால் ரூ. 5 ஆயிரம் வாடகைக்கு அதே வசதியுள்ள கேரவன் இருந்தாலும், இல்லை, எனக்கு அந்த கேரவன்தான் வேண்டும் என்று நெருக்கடி தருகிறார்.
இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது.ஏற்கனவே தினமும் மேக்கப் மேனுக்கு தந்த சம்பளத்தில் தினமும் ரூ. 15 ஆயிரம் ஆட்டைய போட்டவர் யோகிபாபு. இப்போது அவரே சொந்த கேரவன் வாகனத்தை வைத்துக்கொண்டு, அவரே அதில் இருந்துக்கொண்டு அதற்காக ரூ. 10 ஆயிரத்தை தயாரிப்பாளரிடம் வாங்கிக் கொண்டு இருக்கிறாரா, என்ற சந்தேகத்தை இப்போது ஏற்படுத்தியுள்ளது. இதுதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.





