- Advertisement -
Homeபொழுதுபோக்குஜோதிகா மாதிரி நானும் அந்த வாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறேன், திருமணம் குறித்த ஐடியாவே இல்லை -...

ஜோதிகா மாதிரி நானும் அந்த வாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறேன், திருமணம் குறித்த ஐடியாவே இல்லை – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன்பு சன் டிவியில் அசத்தப் போவது யாரு என்ற காமெடி ஷோவில் அவர் பலமுறை தொகுப்பாளராக பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அட்டக்கத்தி படத்தை தொடர்ந்து காக்கா முட்டை ஹலோ நான் பேய் பேசுறேன் தர்மதுரை கனா தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். வழக்கமாக கவர்ச்சி காட்டும் நாயகியாக இல்லாமல் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றார்.

- Advertisement -

இதற்கிடையே கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் தந்த சில படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா கீர்த்தி சுரேஷ் போல இவருக்கும் அதுபோன்ற கதைகள் நல்ல முறையில் வரவேற்பை தந்தன. தமிழில் சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் அண்டர் 18 என்ற படத்தில் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

இந்த படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, அண்டர் 18 படம் அக்கா தம்பி பாசத்தை மாறுபட்ட கோணத்தில் சொல்கிறது. நான் இந்த படத்தில் விக்ராந்த் ஜோடியாக நடித்திருக்கிறேன். கன்னட நடிகர் சுதீப் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஓசூர் பகுதியில் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக காக்கா முட்டை க/பெ ரணசிங்கம் கனா டிரைவர் ஜமுனா சொப்பன சுந்தரி தி கிரேட் இந்தியன் கிச்சன் பர்ஹானா என பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்திருந்தேன். எனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வந்தன. இப்போது கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. ஆனால் தமிழை எப்போதும் விடமாட்டேன். இனிமேல் இந்திக்கு போகிற ஐடியாவும் இருக்கிறது. ஜோதிகாவுக்கு கிடைத்த மாதிரி ஓடிடியில் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.

தெலுங்கில் நான் நடித்த படங்கள் கமர்சியல் ஹிட் ஆகியுள்ளன. அங்கேயும் சில படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறேன். மீண்டும் ஓடிடியில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல கதைகள் எனக்கு முக்கியத்துவமான படங்களில் நடிப்பேன். இப்போதைக்கு திருமணம் குறித்த ஐடியா இல்லை. நான் தெலுங்கு படங்களில் நடித்தாலும் சென்னையில் தான் குடியிருக்கிறேன். ஐதராபாத்தில் வீடு வாங்கி குடியேறவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்