- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி கமல் வந்தால் சந்தோஷமா? அவர்கள் எல்லாம் நடிகர்கள் இல்லையா? - நடிகர் பிரகாஷ் ராஜை...

ரஜினி கமல் வந்தால் சந்தோஷமா? அவர்கள் எல்லாம் நடிகர்கள் இல்லையா? – நடிகர் பிரகாஷ் ராஜை வெளுத்து வாங்கிய நடிகை அம்பிகா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. அப்போதைய நட்சத்திர ஹீரோக்களாக வலம் வந்த ரஜினிகாந்த் கமல்ஹாசன் சத்யராஜ் பிரபு கார்த்திக் மோகன் சிவக்குமார் கே பாக்யராஜ் போன்றவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தவர்.

நடிகை அம்பிகாவின் சகோதரி நடிகை ராதாவும் தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக கொடி கட்டிப் பறந்தவர். ஏராளமான வெற்றிப் படங்களில் ராதாவும் நடித்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் அம்பிகா ராதா என்ற கேரளா சகோதரிகள்தான் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக அசத்திக் கொண்டிருந்தனர் என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஆனால் இப்போது ஏதேனும் சில படங்களில் மட்டுமே அம்பிகா வயதான கேரக்டரில் நடித்து வருகிறார். சில டிவி சீரியல்களிலும் அம்பிகா நடித்திருக்கிறார். மேலும் டிவி சேனல்களில் ரியாலிடி ஷோக்களிலும் நடுவராக அம்பிகா பங்கேற்று வருகிறார். நடிகை ராதாவும் சினிமாவில் நடிக்காத நிலையில் அவரும் சில ரியாலிடி ஷோக்களில் காணப்படுகிறார்.

நடிகை அம்பிகா தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். முதன்முறையாக அரசியல் களத்துக்கு வந்துள்ள விஜய்க்கு வாய்ப்பளித்தால் தான் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் பழனியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகனை பார்த்தால் விசிலடிக்கலாம். நாட்டை கொடுக்க முடியுமா? என்று விஜய் குறித்து விமர்சித்து பேசியது வைரலானது.

- Advertisement -

இதுகுறித்து நடிகை அம்பிகா வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, அப்படி என்ன பொறாமை விஜய் மீது உங்களுக்கு? எல்லாரும் விஜய் ஒரு சினிமாக்காரன் சினிமாக்காரன் என்று மட்டம் தட்ட பார்க்கிறீர்கள்? எம்ஜிஆர் ஜெயலலிதா கலைஞர் தற்போதைய முதல்வர் அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி ஏன் இந்த கூட்டணியில் அங்கமாய் இருக்கும் கமல்ஹாசன் இவர்கள் எல்லாம் நடிகர் இல்லையா?

ஏன் நீங்கள் கூட கர்நாடகாவில் தேர்தலில் நிற்கவில்லையா? அப்போது அதே மக்கள் உங்களையும் சினிமாக்காரன் என்று நினைத்தார்களா? கமல்ஹாசனோ அல்லது ரஜினிகாந்தோ அரசியலில் வந்து ஜெயித்தால் உங்களுக்கு சந்தோஷமா? என்ன நியாயம் இது? என்ன தர்மம் இது? அவர்களை எதிர் கேள்வி கேக்க உங்களால் முடியுமா? என்று அம்பிகா அந்த பதிவில் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்