- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுக்க என்ன காரணம், வெளியான புதிய தகவல்!

நடிகர் விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுக்க என்ன காரணம், வெளியான புதிய தகவல்!

- Advertisement -

நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய், அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தினார்.

லியோ தி கோட் படங்களை தொடர்ந்து இப்போது விஜய், எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாத இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் மக்களை நேரடியாக சந்திக்கும் ஒரு பயணத் திட்டத்தை விஜய் ஆலோசித்து வந்தார்.

- Advertisement -

தளபதி 69 படத்துக்கு பிறகு இனி எந்த படத்திலும் நடிக்கப் போவது இல்லை. இதுதான் என்னுடைய கடைசி படம் என்று விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இப்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது 70வது படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தி கோட் படத்தை இயக்கிய வெங்கட்பிரபுவே இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை மாஸ்டர் லியோ படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவே இயக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. விஜய் இப்படி அடுத்த படத்தில் நடிக்க முடிவெடுத்த காரணம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

எச் வினோத் இயக்கி வரும் தளபதி 69 படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந் கேசரி என்ற படத்தின் தழுவலாகும். இந்த படத்தின் காப்பிரைட் உரிமையை ஏற்கனவே படத்தை தயாரிக்கும் கேவிஎன் புரடக்சன்ஸ் வாங்கி, அதை உறுதி செய்துவிட்டது. தெலுங்கு ரீமேக்கில் விஜய் நடிப்பதும் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது.

தனது கடைசி படம் தெலுங்கு ரீமேக் ஆக இல்லாமல், நேரடி தமிழ் படமாக இருக்க வேண்டும். அத்துடன் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலையில் அந்த படம், தனது அரசியல் நிலைப்பாட்டை சொல்லும் காட்சி வசனங்களும் இருக்க வேண்டும் என்று விஜய் திடீர் முடிவு செய்ததால்தான், தனது 70வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 1.5 ஆண்டுகள் இருப்பதால் அதற்குள் இன்னொரு படம் நடித்து விடலாம் என்பதும் விஜயின் கணக்காக உள்ளது.

- Advertisement -

சற்று முன்