- Advertisement -
திரைப்பட நடிகை பின்னணி பாடகி டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என ஆண்ட்ரியாவுக்கு பல அடையாளங்கள் உள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, இப்பவும் காலேஜ் நிகழ்ச்சிகளுக்கு போய் இளையராஜா சார் பாட்டை பாடினால் அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அந்த பாடல்கள் நான் பிறக்கிறதுக்கு முன்னாடி வந்தவை. ஆனாலும் இன்னைக்கும் இளைஞர்கள் அவ்வளவு ரசிக்கறாங்க. சில பாடல்கள் 15 செகண்ட் பிரபலமா இருந்துட்டு அடுத்த பாட்டு வந்ததும் மறந்து போகலாம். ஆனால் காலத்தை கடந்து நிற்கிற இசை எப்பவும் அப்படியே இருக்கும் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். இளையராஜா இசை போல இன்றைய இளம் இசையமைப்பாளர் பாடல்கள் இசை நிலைத்திருப்பதில்லை என்று ஆண்ட்ரியா விமர்சித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





