சினிமாவில் நட்சத்திர நாயகிகளாக வலம் வந்த முன்னணி நடிகைகள் சிலர் திருமண வாழ்வில் இணைந்து விட்டனர். குறிப்பாக நடிகைகள் நயன்தாரா கீர்த்தி சுரேஷ் சமந்தா வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் திருமணம் நடந்து விட்டது. ஆனாலும் திரிஷா அஞ்சலி அனுஷ்கா போன்ற சில நடிகைகள் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உள்ளனர்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அஞ்சலி ஆனந்தி என்ற கேரக்டரில் அருமையான நடிப்பை தந்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் கவனமும் வரவேற்பும் பெற்றது.
தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் அஞ்சலிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. அந்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தரமணி பேரன்பு சகலகலா வல்லவன் படங்களில் நடித்த அஞ்சலி சிங்கம் 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கும் குத்தாட்டம் போட்டிருந்தார்.
இதற்கிடையே சினிமாவுக்கு சற்று இடைவெளி விட்ட நடிகை அஞ்சலி பறந்து போ என்ற இயக்குனர் ராம் இயக்கிய படத்தில் மீண்டும் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் நடிகர் விஷால் இயக்கி நடித்திருந்த மகுடம் படத்திலும் அஞ்சலி நடித்திருந்தார். இப்போது ராம் இயக்கத்தில் ஏழுகடல் ஏழுமலை படத்திலும் அஞ்சலி நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை அஞ்சலி திருமண வயது கடந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருப்பது குறித்து அவரது ரசிகர்களும் சினிமா நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கும் போது செய்தியாளர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அஞ்சலி கூறியதாவது, என் கல்யாணம் நான் பண்ணிப்பேன். மத்தவங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு எனக்கு புரியலே. கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் கிடையாது என்று நடிகை அஞ்சலி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.





