- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆர் அள்ளி கொடுத்த வாரி வழங்கிய வள்ளல், இந்த விஜய் கிள்ளி கூட தரமாட்டார்,...

எம்ஜிஆர் அள்ளி கொடுத்த வாரி வழங்கிய வள்ளல், இந்த விஜய் கிள்ளி கூட தரமாட்டார், இது ஒரு மைனாரிட்டி அரசு – மதுராந்தகம் தொகுதியில் பேசிய நடிகை சிஆர் சரஸ்வதி ஆவேசம்!

- Advertisement -

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளரை ஆதரித்து குணச்சித்திர நடிகை சிஆர் சரஸ்வதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கே பாக்யராஜ் இயக்கிய எங்க சின்ன ராசா இது நம்ம ஆளு சுவரில்லாத சித்திரங்கள் சொக்கத்தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த பல படங்களில் சிஆர் சரஸ்வதி நடித்திருக்கிறார். நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வரும் நடிகை சிஆர் சரஸ்வதி, அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறார். இதில் தவெக அரசு குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மதுராந்தகம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

அதிமுகவுக்கு ஆதரவாக மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகை சிஆர் சரஸ்வதி பேசியதாவது, சினிமாவில் எத்தனையோ கோடிகளை விட்டுட்டு வந்தேன் என்று விஜய் கூறுகிறார். நானும் சினிமாவில் அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். விஜய் யாருக்கும் 10 காசு கொடுக்க மாட்டார்.

நான் செங்கோட்டையன் அண்ணனுக்கு சொல்கிறேன். கடைசி கடைசியாக ஒன்ஸ்மோர் படம் வரை நான் விஜயுடன் நடித்திருக்கிறேன். ஏனென்றும் கேட்க மாட்டார். கூட இருக்கறவங்களுக்கு சம்பளமும் கொடுக்க மாட்டார். நான் அரசியலுக்காக சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன்.

- Advertisement -

புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் இந்த விஜயை ஒப்பிட்டு அண்ணன் செங்கோட்டையன் பேசுகிறாரே? எம்ஜிஆருக்கு அடுத்து விஜய் என்கிறாரே? வாரி வாரி வழங்கி அள்ளி அள்ளி கொடுத்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். கிள்ளிக்கூட கொடுக்காதவர் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய். இவர் ஒரு மைனாரிட்டி முதலமைச்சர்.

ஏன் திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று சொன்ன ஊடகங்கள், தவெக அரசை மைனாரிட்டி அரசு என்று சொல்வதில்லை. 107 இடங்களில் தானே தவெக வெற்றி பெற்றது. ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தது போல மக்களும் சரியாக தான் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். இல்லை என்றால், மரகதம் குமரவேல் போல இன்னும் 100 பேர் உருவாகி இருப்பார்கள் என்று நடிகை சிஆர் சரஸ்வதி அந்த பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்