- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க படம் ரிலீஸ் ஆக லேட் ஆகுதா? அப்போ கண்டிப்பா அது நடக்கும் - நடிகர்...

உங்க படம் ரிலீஸ் ஆக லேட் ஆகுதா? அப்போ கண்டிப்பா அது நடக்கும் – நடிகர் குமரிமுத்து சொன்னதை கேட்டு தலைசுத்திப் போன நடிகை தேவயானி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை தேவயானி கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக தேவயானி நடித்த காதல் கோட்டை சூரியவம்சம் பிரண்ட்ஸ் நினைத்தேன் வந்தாய் தொடரும் நீ வருவாய் என தெனாலி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. இப்போதும் கேரக்டரை தேர்வு செய்து தேவயானி நடித்து வருகிறார்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாதவர் குமரிமுத்து. இவரது வெடிச்சிரிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். வெடிச்சிரிப்பு குமரிமுத்து என்றுதான் இவரை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். காமெடி ரோல் மட்டுமின்றி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் குமரிமுத்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது, நான் தமிழில் என்னோட முதல் படம் தொட்டாச்சிணுங்கி படத்தில் நடித்த போது நடிகர் குமரிமுத்து எனக்கு அறிமுகமானார். சீனியர் நடிகர். அவரும் அந்த படத்தில் ஒரு ரோல் பண்ணியிருந்தார். அவருக்கு இந்த ஜாதகம் நட்சத்திரம் ராசி இதெல்லாம் பார்க்கத் தெரியும்.

என்னிடம் என் அம்மாவிடம் நல்லா பேசுவார். ஷெட்டில் எங்களுடன் நிறைய பேசிக்கொண்டு இருப்பார். அப்போது நான் நடித்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்று என்னை பற்றி என் அம்மா சொல்லிக்கொண்டு இருந்தார். பர்ஸ்ட் படம் ரிலீஸ் ஆகலையா, அப்போ தேவயானி பெரிய நடிகையா வருவாங்க என்று குமரிமுத்து கூறிவிட்டார்.

- Advertisement -

தமிழ்நாட்டில் அது ரொம்ப நல்ல பாசிட்டிவ் ஆன சென்டிமென்ட் என்றும் அவர் எங்களிடம் கூறினார். அப்போ நானும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு ஷாக் ஆயிட்டோம். என்ன இப்படி சொல்றாங்க என்று. ஆமா நீங்க பாருங்க.

நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இப்படிதான் நடந்திருக்குது. அதுக்கு அப்புறம் அவங்க நல்ல பெரிய ஆர்ட்டிஸ்ட் ஆகியிருக்காங்க என்று சொன்னார். அது பின்னாளில் அப்படியே நடந்தது என நடிகை தேவயானி மகிழ்ச்சியாக மறைந்த நடிகர் குமரிமுத்து குறித்து அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்