தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. பல வெற்றிப் படங்களில் நாயகியாக நடித்தவர். ஹோம்லியான கேரக்டர் என்றாலே அதில் முதல் சாய்ஸ் ஆக இயக்குனர் தயாரிப்பாளர் நினைவுக்கு வருபவர் நடிகை தேவயானியாக தான் இருப்பார். பெண் ரசிகைகள் மத்தியில் தேவயானிக்கு பெரிய வரவேற்பும் இருந்தது.
குறிப்பாக சூரியவம்சம் தெனாலி நீ வருவாய் என தொடரும் பிரண்ட்ஸ் நினைத்தேன் வந்தாய் காதல் கோட்டை தென்காசி பட்டணம் விண்ணுக்கும் மண்ணுக்கும் என பல படங்களில் தேவயானி நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு படங்களிலும் தேவயானி குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக பஞ்ச தந்திரம் படத்தில் தேவயானி நிர்மலா என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் சில காட்சிகள் மட்டுமே வருவார். ஓட்டல் அறை ஒன்றில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கும் தேவயானியை கமல் சென்று காப்பாற்றுவதுதான் அந்த காட்சி. அதில் எவ்ளோ பெரிய மாத்திரை என்று அவர் சொந்த குரலில் பேசி நடித்தது பெரிய வரவேற்பை பெற்றது.
தமிழில் பிஸியாகவும் முன்னணி ஸ்டார் நடிகையாகவும் வலம் வந்த தேவயானி, இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக மாறிய இராஜகுமாரனை தனது பெற்றோர் எதிர்ப்பையும் மீறி தேவயானி காதல் திருமணம் செய்துக்கொண்டார். இராஜகுமாரன் மீது காதல் ஏற்பட்டது எப்படி என்பது குறித்து நடிகை தேவயானி வெளிப்படையாக இப்போது பேசியிருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது, அவர் நீ வருவாய் என படத்தில் எழுதிய காதல் வசனங்களை பார்த்துதான் நான் அவரிடம் மயங்கி விட்டேன். அவரை பார்த்தாலே ஒரு லவ் என்சைக்ளோபீடியா மாதிரியே இருந்தார். அப்படி அவர் எழுதிய காதல் வசனங்கள் நிறைய இருக்கு. அய்யய்யோ… காதல் வசனங்கள் அவ்வளவோ இருக்கும் அந்த படத்தில்.
காதலை வெச்சுக்கிட்டு இப்படி வசனங்கள் எழுதணும் என்றால் மனசுக்குள் அவ்வளவு காதல் இருந்தால்தானே இப்படி வசனங்களை எழுத முடியும். அதுவும் கவிதை தனமாக என்னை வந்து அது ரசிச்சு ரசிச்சு எடுக்கறது, என்னை ரொம்ப அழகா காட்டணும் என்று அவர் நினைக்கிறது இது எல்லாம் பார்த்து நான் அவர்கிட்ட மயங்கிட்டேன் என்று நடிகை தேவயானி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





