- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது மோகன்லாலின் தொடரும் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது தமிழ் சினிமாவின் அந்த உச்ச...

என்னது மோகன்லாலின் தொடரும் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது தமிழ் சினிமாவின் அந்த உச்ச நட்சத்திரத்தின் மனைவியா… நம்பவே முடியலையேப்பா…

- Advertisement -

கேரள சினிமாவில் ஏராளமான நடிகர் நடிகைகள் இருந்தாலும் அவர்களில் உச்ச நட்சத்திரமாக விளங்குவது மோகன்லால் தான். அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் அங்கு இருக்கிறது. இதற்கு மிக மிக முக்கிய காரணம் மோகன்லாலின் கதை தேர்வு தான். அவரின் ஒவ்வொரு திரைப்படத்தின் கதைக்களமும் வித்தியாசமாக இருக்கும். முந்தைய திரைப்படம் திரில்லர் என்றால், அடுத்தது அப்படியே வேறு விதமாக கொடுப்பார்.

மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் மோகன்லால் பரிச்சயமானவராக இருக்கிறார். மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் கவனிக்கப்பட்டார் மோகன்லால். இதேபோல் கமல்ஹாசன் எடுத்த உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக வந்து பலரையும் கவர்ந்திருப்பார்.

- Advertisement -

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் விஜய் உடன் இணைந்து நடித்த ஜில்லா திரைப்படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. விஜய் மோகன்லால் என மாபெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்த அந்த திரைப்படம், அந்த சமயத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் லாபமாகவே அமைந்தது.

அதேபோல் மோகன்லால் நடித்த திருஷ்யம் திரைப்படமும், இங்கு பாபநாசம் ஆக எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வழியாகி தற்போது மூன்றாம் பாகமும் எடுக்க இருப்பதாக சொல்லி வருகிறார்கள். இதனிடையே அண்மையில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் வெளியானது.

- Advertisement -

மோகன்லால் நடிப்பில் ஏற்கனவே வெளியான லூசிபர் திரைப்படத்தின் அடுத்த பாகமாக இது எடுக்கப்பட்டது. மிகப்பெரும் பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் காட்டவில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் மோகன்லாலுக்கு தொடரும் என்னும் திரைப்படம் மலையாளத்தில் வெளியானது. தருண்மூர்த்தி இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்திருக்கிறது.

குடும்ப எமோஷனை விவரிக்கும் திரைப்படம் ஆக இது எடுக்கப்பட்டுள்ளது. இதில் மோகன் லாலின் மனைவியாக ஷோபனா நடித்திருக்கிறார். முதலில் இந்த கேரக்டருக்கு, ஜோதிகாவிடம் பேசியதாகவும் அவருக்கும் கதை பிடித்ததாகவும் கூறியிருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி. கடைசி நேரத்தில் அவரால் ஷூட்டிங்கில் பங்கு பெற முடியாத சூழல் ஏற்பட்டதால் ஷோபனா இந்த திரைப்படத்தில் நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்